செய்திகள்

பிளஸ்-2 துணைத்தேர்வு: 56 ஆயிரம் பேர் எழுதினர்

சென்னை, ஜூன் 19–

மழையிலும் நடந்த பிளஸ்-2 துணைத்தேர்வை 56 ஆயிரம் பேர் எழுதினர்.

பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ- – மாணவிகள் உடனயாக தேர்வு எழுதி இந்த கல்வியாண்டிலே உயர்கல்வி தொடர வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு பள்ளிகளில் நேரடியாக படித்தவர்களும், தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

அதன்படி 56 ஆயிரம் பேர் துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தனர். 39,983 மாணவர்களும், 18,013 மாணவிகளும் தோல்வி அடைந்த பாடங்களை எழுத விண்ணப்பித்தனர். அவர்களுக்கு தேர்வு நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டது.

தமிழகம் முழுவதும் 194 மையங்களில் துணைத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் துணைத்தேர்வு திட்டமிட்டபடி இன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மழையிலும் இத்தேர்வு நடத்தப்படடது. விண்ணப்பித்த மாணவர்கள் மழையில் நனைந்தபடி தேர்வு மையத்திற்கு வந்து தேர்வை எழுதினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *