சென்னை, மே 16–
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டது. இதில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கணினி அறிவியலில் -– 3535 பேர், கணிதத்தில் -– 1338 பேர், தமிழில் – 41 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
2025 கல்வியாண்டுக்கான பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 5 தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. 7,557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் சுமார் 3,316 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதினர். 11,025 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in http://www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டன. மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன்படி இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வெழுதிய 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 மாணவர்களில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 232 (92.09%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3 லட்சத்து 39 ஆயிரத்து 283 (88.70%) பேரும், மாணவிகள் 4 லட்சத்து 03 ஆயிரத்து 949 (95.13%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.43% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தனித்தேர்வு எழுதிய 4,326 பேர்களில் 950 பேர் தேர்ச்சி (21.96%) பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 125 தேர்வெழுதிய நிலையில், 113 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 9,025 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 8,460 பேர் (91.91%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,558 ஆகும். இதில் 2,042 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் 87.34%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.09%, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 98.03% பேர் தேர்ச்சி அடைந்தனர். இதில் 282 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் ஐந்து மாவட்டங்களில் அரியலூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளன.
பாடப் பிரிவுகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:
அறிவியல் பாடப் பிரிவுகள்: 95.08%, வணிகவியல் பாடப் பிரிவுகள்: 87.33%, கலைப் பிரிவுகள்: 77.94%, தொழிற்பாடப் பிரிவுகள்: 78.31%,
பாடவாரியாக 100க்கு 100 வாங்கியவர்கள்:
தமிழ் -– 41, ஆங்கிலம் -– 39, இயற்பியல் -– 390, வேதியியல் -– 593, உயிரியல் -– 91, கணிதம் -– 1338, தாவரவியல் -– 4, விலங்கியல் -– 2, கணினி அறிவியல் -– 3535, வரலாறு – -35, வணிகவியல் -– 806, கணக்குப் பதிவியல் – -111, பொருளியல் –- 254, கணினிப் பயன்பாடுகள் -– 761, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் – – 117.
மாவட்ட வாரியாக
தேர்ச்சி சதவிகிதம்
தேர்ச்சி விகிதத்தின்படி அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு, விருதுநகர், கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் முதல் ஐந்திடத்தில் உள்ளன. அரியலூர் – 97.76 %, ஈரோடு– 96.97 %, விருதுநகர்– 96.23 %, கோயம்புத்தூர்– 95.77 %, தூத்துக்குடி– 95.07%, அதற்கு அடுத்து சிவகங்கை – 94.79%, திருப்பூர்– 94.62%, மதுரை– 93.91%, நாகப்பட்டினம்– 93.51%, திருநெல்வேலி– 93.42%, தஞ்சாவூர்– 93.32%, தேனி– 93.18%, திண்டுக்கல்– 93.08%, தென்காசி– 93.05%, ராமநாதபுரம்– 92.93%, தர்மபுரி– 92.71%, பெரம்பலூர்– 92.56%, நாமக்கல்– 92.46%, கடலூர்– 92.44%, திருச்சி– 92.31%, திருப்புத்தூர்– 91.84%, விழுப்புரம்– 91.58%, திருவண்ணாமலை– 91.25%, சென்னை – 90.93%, சேலம்– 90.93%, கரூர்– 90.80%, திருவாரூர்– 90.67%– கள்ளக்குறிச்சி– 89.99%, மயிலாடுதுறை – 89.58%, செங்கல்பட்டு – 89.17%, ஊட்டி– 88.36% – கிருஷ்ணகிரி – 88.31%, காஞ்சிபுரம் – 88.18%, புதுக்கோட்டை– 87.80%, திருவள்ளூர்– 87.39%, ராணிப்பேட்டை– 86.95%, கடைசி மாவட்டம் வேலூர்– 85.88%. காரைக்கால்– 96.83%, புதுச்சேரி – 96.86% தேர்ச்சி பெற்றுள்ளது.