செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்துள்ள உலகின் 800 ஆவது கோடி குழந்தை

உலக மக்கள் தொகை 15 ஆண்டில் 900 கோடியை எட்டும்

ஜெகார்தா, நவ. 16–

உலகின் 800 ஆவது கோடி குழந்தை தங்கள் நாட்டில் பிறந்துள்ளதாக அறிவித்துள்ள ஃபிலிபைன்ஸ் அரசு, இந்த பெண் குழந்தையின் பிறப்பை விழாவாகவே கொண்டாடி தீர்த்துள்ளது.

உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் கொரோனா தாக்கத்தின் விளைவாக அண்மை காலமாய் பிறப்பு விகிதம் கணிசமான அளவு குறைந்துள்ளது. அதேசமயம் இந்தியாவின் மக்கள் தொகை வழக்கம் போல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இன்னும் சில ஆண்டுகளிலேயே மக்கள் தொகையில் இந்தியா சீனாவை விஞ்சிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகின் மக்கள்தொகை நேற்று 800 கோடி என்ற புதிய மைக்கல்லை தொட்டுள்ளது. 12 ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2010 இல் 700 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 2022 இன் முடிவில் 800 கோடியாக ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, உலகின் 800 ஆவது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் பிறக்கும் என்று ஐநா சபை அண்மையில் கணித்திருந்தது.

பெயர்–வின்சி மபனசாக்

இந்த கணிப்பின்படியே, மணிலா நகரின் டோண்டோ பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ஜோர் பேபெல்லா மெமோரியல் மருத்துவமனையில், இன்று அதிகாலை 1:29 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வின்சி மபன்சாக் என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தையை உலகின் 800 ஆவது கோடி குழந்தையாக அறிவிக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் அரசு சார்பில் மருத்துவமனையில் விழா கொண்டாடப்பட்டது.

உலகின் மக்கள்தொகை 900 கோடியாக ஆக அதிகரிக்க இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்று ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *