செய்திகள்

பிற்பட்டோர் துறைக்கு ரூ.1,429 கோடி ஒதுக்கீடு

சென்னை, பிப்.19–

வரவு-–செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்‌ துறைக்கு 14429 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மைக்‌ கல்வி நிறுவனங்களின்‌ நீண்டகாலக்‌ கோரிக்கையை ஏற்று, அவற்றுக்குரிய சான்றிதழ்களை நிரந்தரமாக வழங்குவதற்கான ஆணைகள்‌ வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவு, சிறுபான்மையினரிடையே பெரும்‌ வரவேற்பைப்‌ பெற்றுள்ளது.

வழிபாட்டுத்‌ தலங்களுக்கு முறையான அனுமதி பெறுவதிலும்‌, வழிபாட்டுத்‌ தலங்களில்‌ புனரமைப்புப்‌ பணிகளை மேற்கொள்வதிலும்‌ உள்ள இடர்பாடுகளைக்‌ களைந்திட விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்‌ விரைவில்‌ வெளியிடப்படும்‌ என்று சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தெரிவித்தார்.

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை அவர் சபையில் தாக்கல் செய்து பேசியதாவது:–

பள்ளிவாசல்களையும்‌, தர்காக்களையும்‌ பழுதுபார்ப்பதற்கும்‌ சீரமைப்பதற்கும்‌ இந்த ஆண்டு 10 கோடி ரூபாய்‌ மானியம்‌ வழங்கப்படும்‌. கன்னியாகுமரி மாவட்டம்‌ தக்கலை, வேலூர்‌, தென்காசி மாவட்டத்தில்‌ பொட்டல்புதூர்‌ உள்ளிட்ட இடங்களிலுள்ள தர்காக்கள்‌ இந்த ஆண்டு சீரமைக்கப்படும்‌. தேவாலயங்களைப்‌ பழுதுபார்ப்பதற்கும்‌, சீரமைப்பதற்கும்‌ இந்த ஆண்டு 10 கோடி ரூபாய்‌ மானியம்‌ வழங்கப்படும்‌.

சென்னையில்‌ சூளை, கடலூர்‌ மாவட்டத்தில்‌ விருத்தாச்சலம்‌, சிவகங்கை மாவட்டத்தில்‌ இடைக்காட்டூர்‌ உள்ளிட்ட பல்வேறு இடங்களில்‌ உள்ள தேவாலயங்களைப்‌ பழமை மாறாமல்‌ புதுப்பிக்கப்படும்‌.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *