சிறுகதை

பிறந்த நாள் பரிசு | கோவிந்த ராம்

Spread the love

‘‘மகள் அமுதாவின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்’’.. என்று அப்பா ஆராவமுதன் தன் மனைவி கமலத்திடம் கேட்டார்.

எப்பவும் போல அமுதாகிட்ட கேட்டு அவளுக்கு எது புடிக்கிதோ அதையே வாங்கிக்கொடுங்க..’’ என்றாள் கமலா.

‘‘இல்லை .. கமலா. இந்த பிறந்த நாளுக்கு அவகிட்ட கேட்கக் கூடாது.. சஸ்பென்சா..நாமே அவளுக்கு எது ரொம்ப பிடிக்குனு தெரிஞ்சு அதையே அவளுக்கு பரிசாக கொடுக்கனும்..’’ என்றார் ஆரவமுதன்.

பிறகு சிறிது நேரம் கழித்து தன் மகன் குமாரைத் தனியாக அழைத்தார்.

‘‘குமார் இந்த வருசம் அக்கா பிறந்த நாளுக்கு நாம்ம என்ன பரிசு கொடுத்தா அவள் சந்தோசப்படுவா.. நீயும் கொஞ்சம் யோசுச்சு சொல்றீயா..’’ என்றார் .

அவனும் அக்கா அமுதாவிற்கு என்ன வெல்லாம் பிடிக்கும் என்று யோசனை செய்து ஒரு காகிதத்தில் எழுத ஆரம்பித்தான்.

சென்ற வருடம் அப்பாவிடம் ஒரு ஸ்கூட்டி வேண்டுமென்று அக்கா கேட்டாள் .

அதற்கு அப்பா இப்பவேண்டாம்; அடுத்த வருசம் வாங்குவோம் என்று அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அதை முதல் விருப்பமாக எழுதினான் குமார் .

இரண்டாவதாக ஒரு ஆண்டராய்டு போன் என்று எழுதினான்.

மூன்றாவதாக ‘என்ன எழுதலாம்..’ என்று யோசிக்கும் போது

‘‘டேய் குமார்.. என்று அம்மா அவனை அழைத்தாள்.

‘‘என்னம்மா.. ’’ அறையைவிட்டு வெளியே வந்தான் குமார்

‘‘என்ன செய்றே.’’

‘‘அக்கா பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்னு அப்பா கேட்டாங்க. அதான் யோசுச்சு எழுதிக்கிட்டுயிருக்கேன் ..’’

‘‘அவளுக்கு என்ன பிடிக்கும்னு நீ யோசுச்சா மட்டும் பத்தாதுடா. அவ பிரண்ட் தேவிக்கிட்டயும் கேளு; அவ சொல்லுவா..’’ என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குச்சென்று விட்டாள் கமலம்.

குமார் தன் மொபைலை எடுத்து அதில் தேவியின் நம்பருக்கு ஒரு செய்தியை அனுப்பி‘ என் அக்கா அமுதாவிற்கு எது ரொம்ப பிடிக்கும்’ என்று பதில் அனுப்பச் சொன்னான்.

அவளும் யோசித்துப்பார்த்து உன் அக்கா அமுதாவிற்கு இப்போது அவளுடைய ஆண் நண்பர் அசோக்கைத்தான் மிகவும் பிடிக்கும் என்று மறுசெய்தியை அனுப்பி வைத்தாள்.

இதையே மூன்றாவதாக ‘அசோக்’ என்று தன் லிஸ்டில் எழுதி விட்டான் குமார் .

அமுதா அசோக்கை விரும்புவதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தார் ஆராவமுதன்.

இந்த விசயத்தை உறுதிப்படுத்தும் விதமாக அசோக்கை தன் வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு வரச்சொல்லி சந்தித்தார் ஆராவமுதன்.

‘‘அமுதாவிற்கு எது மிகவும் பிடிக்கும் அசோக் ..’’ என்று கேட்டார்.

அசோக் யோசிக்க ஆரம்பித்தான்.

‘‘யோசுச்சு சொல்லக் கூடாது உடனே சொல்லு அசோக் ’ என்றார்.

‘‘அமுதாவுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும்..’’ என்றான் அசோக்.

‘‘உனக்கு அமுதாவை பிடிக்குமா..? என்று கேட்டார் ஆராவமுதன்

‘‘ ம்… அமுதாவை என்னை ரொம்ப பிடிக்கும் சார்.. ஆனா.. தெய்வம் என்ன முடிவு எடுத்திருக்கிறதோ..? என்றான்.

அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் கோவிலைவிட்டு வெளியே சென்றார் ஆராவமுதன்.

அவர் வேகமாக போய்க் கொண்டிருப்பதை உட்கார்ந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான் அசோக்.

வீட்டிற்கு வந்த ஆராவமுதன் தன் மகன் குமாரை அழைத்து

‘‘என்ன குமாரு.. அக்காவுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டியா..

‘‘தெரிஞ்சுகிட்டேன்பா..’’ என்று தன் கையில் எழுதி வைத்திருந்த காகித்தை ஆராவமுதன் கையில் கொடுத்தான் குமார்.

காகித்தை பிரித்து பார்த்த ஆராவமுதன் அதில்‘ அமுதா அக்காவிற்று ரொம்ப பிடித்து அசோக்’ என்று எழுதியிருந்தது.

‘‘கமலா கொஞ்சம் இங்க வா..’’ என்று தன் மனைவியை அழைத்தார் ஆராவமுதன்.

‘‘என்னங்க..’’ என்று தன் முந்தானையால் முகத்தை துடைத்தபடியே வந்து நின்ற கமலாவை பார்த்து,

‘‘அமுதாவுக்கு என்ன பிடிக்குனு கண்டுபிடுச்சிட்டேன்’’..

‘‘என்ன அவளுக்கு பிடிச்சுருக்கு..’’ என்ற ஆர்வமாக கேட்டாள் கமலம்.

‘‘அசோக்தான்..’’

‘‘அசோக்கா அது யாரு ?’’என்று அதிர்ச்சியாய் கேட்டாள் கமலம்

‘‘அவன் அமுதாவுடைய பாய் பிரண்ட்..’’

‘‘என்னங்க சிரிச்சுகிட்டே சொல்றீங்க..’’

‘‘ஆமா என்ன பண்ணச் சொல்றா..அவங்க ரெண்டும் போரும் விரும்பிட்டாங்க.. அதை நம்ம மனசார ஏத்துகிறது தான் நாம அமுதாவுக்கு கொடுக்குற பிறந்த நாள் பரிசு..’’

‘‘என்னங்க.. இது நல்லாவா.. இருக்கு..’’

‘‘நல்லாத்தான் இருக்கும்..’’

‘‘எப்படி நல்லா இருக்கும் சொல்லுங்க..’’

‘‘கமலா.. ரெண்டுபேருக்கும் பருவ வயசு.. ஆசைப்பட்டது கெடச்சுருன்னா.. வேற எதிலும் கவனம் செலுத்தாம படிப்பில மட்டும் ஆர்வம் காட்டத் தொடங்கு வாங்க..

அமுதாவுக்கு அசாக்தான்னு முடிவு செஞ்சுட்டா அமுதாவை வேறு யாரும் அணுகமாட்டாங்க. அதேமாதிரி அசோக் மேலயும் எந்த பெண்ணுக்கும் ஈர்ப்பு வராது என்றார் ஆராவமுதன்.

*

அமுதாவின் பிறந்த நாள் அன்று மாலை பொழுதில்

அமுதாவின் கல்லூரி நண்பர்கள் அனைவரும் அமுதாவின் வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பிறந்தான் கேக் வெட்டிமுடிந்ததும் ஆராவமுதன் ‘‘என் மகள் அமுதாவுக்கு பிறந்த நாள் பரிசாக அவளுக்கு மிகவும் பிடித்த அசோக்கை பரிசாகத் தருகிறேன்..’’ என்றார்

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அமுதா, அசோக் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டனர்.

இருவரும் ஆராவமுதன் கமலா காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *