செய்திகள்

பிறந்த ஒரே நாளில் பெண் சிசு உயிருடன் புதருக்குள் வீச்சு

Spread the love

திருப்பூரில் கொடூரம் 

பிறந்த ஒரே நாளில் பெண் சிசு உயிருடன் புதருக்குள் வீச்சு

 

திருப்பூர், மே 23–

திருப்பூரில் பிறந்து ஒரு நாளே ஆன பெண் சிசு உயிருடன் புதருக்குள் வீசப்பட்ட கொடூர சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அவிநாசி சாலை, பெரியார் காலனி தனியார் மருத்துவமனை அருகில், பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் வழியில் உள்ள புதருக்குள் இன்று அதிகாலை குழந்தையின் மெல்லிய அழுகுரல் கேட்டுள்ளது. அந்த வழியாக சென்ற பெண்கள் புதருக்குள் பார்த்தனர். அப்போது பெண் குழந்தை ஒன்று துண்டால் சுற்றிய நிலையில் போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த குழந்தையை எடுத்து பார்த்தனர். தொப்புள் குடி அறுக்கப்படாத நிலையில் பிறந்த ஒரே நாளில் அந்த குழந்தை வீசிப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த நந்தகோபால் என்பவர் பெண் குழந்தை உயிருடன் வீசப்பட்டது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் சைல்டுலைன் அமைப்புக்கும் தகவல் அளித்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.

பிறந்த ஒரே நாளில் பெண் குழந்தை புதருக்குள் வீசப்பட்ட கொடூர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *