செய்திகள்

பிரேசிலில் லாரி மீது பஸ் மோதல்: 11 பேர் பரிதாப பலி , 7 பேர் காயம்

Makkal Kural Official

பிரேசிலியா, ஜன. 3:

பிரேசிலில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரேசிலின் தெற்குப் பகுதியில், ரியோ கிராண்டேவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பஸ் ஒன்று நிலை தடுமாறி, அந்த வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் பலத்த காயமுற்றனர். விபத்து குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

லாரியில் இருந்த மண் பஸ் மீது கொட்டியதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *