செய்திகள்

பிரேசிலில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் உட்பட 20 பேர் பலி

பிரேசில், மே 7–

ஜாகரேசின்ஹோ நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவின் மாநிலத்தில் உள்ள ஜாகரேசின்ஹோ நகரத்தில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 20 பேர் இறந்ததாக, ஓ குளோபோ செய்தித்தாள் இணையத்தில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம்தான், ரியோவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கிச் சூட்டில், மெட்ரோ ரயிலில் இருந்த இரண்டு பயணிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாகரேசின்ஹோவில் இறந்தவர்களில், போதைப்பொருள் கடத்தலில் ஆதிக்கம் செலுத்திய அந்த கும்பலின் தலைவர்களும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2007 -இல் காம்ப்ளெக்ஸோ டூ அலெமியோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்19 வரை உயிரிழந்ததே இந்த நகரத்தில் நடந்த அதிக அளவு பலி என்று, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரியோ டி ஜெனிரோ பிரேசிலின் மிகவும் வன்முறை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *