செய்திகள்

பிரேசிலில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தொற்று அதிகரிப்பு

பிரேசிலியா, ஜூன் 15–

பிரேசிலில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. பிரேசிலில் இதுவரை 24 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது பிரேசிலில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 40,865 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்னிக்கை 1 கோடியே 74 லட்சத்து 54 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 928 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 88 ஆயிரத்து 404 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *