செய்திகள்

பிரிட்டன் ‘நார்டன்’ சொகுசு பைக் கம்பெனியை ரூ.153 கோடிக்கு வாங்கியது டி.வி.எஸ். மோட்டர்ஸ்

பிரிட்டன் ‘நார்டன்’ சொகுசு பைக் கம்பெனியை ரூ.153 கோடிக்கு வாங்கியது டி.வி.எஸ். மோட்டர்ஸ்

விரைவில் இந்தியாவில் அறிமுகம்: சுதர்சன் வேணு தகவல்

 

சென்னை, ஏப். 19–

டி.வி.எஸ். மோட்டர்ஸ் பிரிட்டன் பிரபல ஸ்போர்ட்ஸ் பைக் கம்பெனி நார்டனை ரூ.153 கோடிக்கு வாங்கியது. விரைவில் இதன் தயாரிப்பான கமாண்டோ, டாமினேட்டர், வி4RR ரக சூப்பர் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது என்று இதன் நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு தெரிவித்தார்.

உலக அளவில் டி.வி.எஸ். மோட்டர்ஸ் ஏற்றுமதி செய்யவும், இந்தியாவில் சர்வதேச பிரபல பைக் இறக்குமதி செய்யவும் நார்டன் பைக் நிறுவனத்தை ஏற்றுள்ளது. இதன் சொகுசு பைக் 1200 சி.சி. என்ஜினுடன் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் விளங்கும்.

நார்டன் வளர்ச்சிக்கு டி.வி.எஸ். மோட்டர்ஸ் முழு ஆதரவு அளிக்கும். அதன் மூலம் நார்டன் பைக் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்தில் 1898–ம் ஆண்டில் பிரிமிங்காம் நகரில் ஜேம்ஸ் நார்டன் துவக்கிய நார்டன் மோட்டர் சைக்கிள் நிறுவனம் உலக அளவில் பிரபலமாகி உள்ளது.

இது பற்றி அறிய www.tvsmotor.com வலைதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *