ஆர். முத்துக்குமார்
உலக நடப்புகளை திசை மாற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டின் ‘முடிவில் எதிர்பார்க்கப்பட்டது, இவ்வாண்டு துவக்கம் முதலே செயல்வடிவம் பெற்றும் வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையும் நாட்டோ குழுமங்கள் எல்லாமே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கைப்பாவையாக இருக்கையில் ஆசிய ஜாம்பவான்கள் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு எந்தத் தீர்வும் பெற முடியாத நிலையில் சர்வதேச அரசியலும் நிகழ்வுகளும் இருந்து வருகிறது.
இதை மாற்றி புதிய சர்வதேச நடப்புகளை அமுல்படுத்தும் அதிகாரமிக்க குழுமமாக பிரிக்ஸ் உயர்ந்து விட்டது.
ஈரான், சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு நாடுகள், அர்ஜென்டினா மற்றும் எத்தியோப்பியா புதிய அங்கத்தினராக ஜனவரி 1, 2024 முதல் ஈரான், சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு நாடுகள், அர்ஜென்டினா மற்றும் எத்தியோப்பியா புதிய அங்கத்தினராக ஜனவரி 1, 2024 முதல் செயல்பட்டு வருகிறார்கள்.
இப்போது தாய்லாந்தும் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கும் என அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்குள் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பிரிக்ஸ் உறுப்பினர்களின் நோக்கமாகும், இது கடந்த காலத்தில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ஒரு முடிவெடுத்து வாக்களித்த சம்பவங்கள் உண்டு.
உதாரணமாக, 2011 இல் அனைத்து பிரிக்ஸ் நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களாக இருந்தபோது, பல தீர்மானங்களில் ஒரே மாதிரியாக வாக்களித்தனர், பாதுகாப்பு குறித்த கருத்துக்கள் ஒரே குரலாய் ஒலித்தும் இருக்கிறது.
காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் பொருளாதாரத் தடைகள், ஈரான் மற்றும் சிரியா தொடர்பான கொள்கைகள் மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகள் சார்ந்த பல உலக நடப்புகளில் பிரிக்ஸ் நாடுகள் ஒரு மித்த கருத்தை வெளியிட்டனர்.
காசா மீது நடவடிக்கை எடுத்த இஸ்ரேலிய ராணுவம் நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்துக்கும் அமெரிக்காவின் இரட்டை வேடத்திற்கும் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தும் வருவதைதையும் ,போர்நிறுத்தத்திற்கான ஐ.நா தீர்மானத்தில் இணைந்து செயல்பட்ட விதத்தையும் வல்லரசுகள் கூர்ந்து கவனித்து வருவதையும் பார்க்கிறோம்.
பிரிக்ஸ் அமைப்பில் தாய்லாந்தின் சர்வதேச செல்வாக்கை மேம்படுத்தும் மற்றும் புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பதில் பங்கேற்க கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் என உறுதிபட நம்புவது ஏன் ? எனப் புரிகிறது.
பிரிக்ஸ் தங்கள் பொருளாதார வளர்ச்சிகளுக்கு மட்டுமின்றி அரசியல் லட்சியங்களுக்காகவும் இணைந்து செயல்பட்டு வருவதை பார்க்கும் போது பிரிக்ஸ் அமைப்பு மீது புது நம்பிக்கை பிறக்கிறது.
உலகளாவிய சவால்கள் அதிகரித்து வரும் சூழலில் பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை உணர்கின்றன, அதைப் புரிந்து கொண்டு மேலும் பல ஆசிய நாடுகள் இவ்வமைப்பில் இணைந்து செயல்பட தயாராகி விட்டனர்.
பிரிக்ஸ் நாடுகள் தங்கள் பொருளாதாரங்களை ஒருங்கிணைப்பது உலகளாவிய வளர்ச்சியை ஊக்குவிக்கும்; வலுப்படுத்தும்.
பிரிக்ஸ் அமைப்பு பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் கலாச்சாரங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த பன்முகத்தன்மை உலகளாவிய சவால்களை புரிந்துகொள்வதற்கும் தீர்வுகளைக் கண்டறியவும் உதவுகிறது.