தலையங்கம்
இலங்கை, பிரிக்சில் இணைவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது, இது புதிதாக பதவி ஏற்று இருக்கும் இலங்கை ஜனாதிபதி திசாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது.
பிரிக்சின் தலைவர்கள், இலங்கை சேரத் தயாராகுவதை கண்டிப்பாக வரவேற்ப்பார்கள்.
ஆசிய கடல் பகுதியில் மையமாக உள்ளதுடன், பொருளாதாரப் பாதுகாப்புத் துறைகளில் சக்தியாக மாறுவதற்கு இலங்கை தயாராக இருக்கிறது.
பிரிக்ஸ் கூட்டனியில் இலங்கைக்கு சேர வாய்ப்பு கிடைத்துவிட்டால் நிதி ஆதாரங்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத்தில் வர இருக்கும் புதிய பிரிக்ஸ் பணம் போன்ற பல நன்மைகளைப் பெற்றுத் தரும்.
பிரிக்சில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. புதிய அங்கதினர்களாக பலர் வர மிக ஆவலுடன் வரவேற்று வருவதை கண்டோம்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு முக்கிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை விண்ணப்பத்துக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளது.
இது இலங்கைக்கு பொருளாதார பலம் தருவதுடன் மேலும் பல புதுப்புது வாய்ப்புகள் பெற்றும் தரும்.
இலங்கைப் பொருளாதாரத்தை வளர்க்கும் பல புதிய புள்ளிகள் உருவாகி மிக ரம்மியமான கோலம் தயாராகத்தான் போகிறது.
பிரிக்ஸ் வழியாக, இலங்கை, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளைச் சரி செய்து அதன் பொருளாதாரச் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியும்.
இவ்வாறான சூழலில், பிரிக்ஸ் சுயநிதி வழிமுறைகள், புதிய நாணயத் திட்டங்கள், உள்நாட்டு நலன்களை உறுதி பொருளாதாரத் திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கும் வகையில் இலங்கை முக்கிய பங்காற்ற முடியும்.
பிரிக்ஸ்சில் இணைவதால் சர்வதேச அரசியலிலும் ஆசியாவின் வர்த்தக மேன்மைகளை அனுபவிக்க இலங்கைக்கு வசதிகள் கிடைக்கும்.
குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவிற்கு இலங்கை தங்கள் உறவுகளை வலுப்பட உதவும்,
இலங்கையை சீனாவின் பொருளாதார ஆதரவு மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளை சமநிலைப் படுத்தியிருக்கின்றது. இதில் ரஷ்யாவின் நடுநிலையான பார்வையும் அவர்களுக்கு உண்டு.
இவை மூன்றும் இலங்கையின் பிராக்ஸிசில் சேர விண்ணப்பித்து இருப்பதற்கு சாதகமாக இருக்கப்போகிறது,
சமீபத்தில் துருக்கி சேர ரஷியா வரவேற்றது. அதற்கு எதிர்ப்பை இந்தியா தெரிவித்து இருப்பதை அறிவோம்.
இதை மனதில் கொண்டே சீனா இதுவரை பாகிஸ்தானுக்கு சாதகமாக விண்ணப்பிக்கவே இல்லை!
ஆனால் இலங்கையின் விண்ணப்பத்தைப் பொறுத்த வரை இந்தியா, சீனா மற்றும் ரஷியாவும் வரவேற்கும்.
இலங்கை உறுப்பினராக இணைந்தால், இது பிரிக்சின் பன்முகக் தன்மையை மேலும் விரிவாக்குகிறது. காரணம்
பிரிக்சின் உறுப்பினர்களில் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகள் இருப்பதாலும் இலங்கை இதனை வலுப்படுத்துவதில் பலனளிக்கும். பௌத்த பெரும்பான்மை கொண்ட இந்த தென்கிழக்காசிய நாடு, பரந்த அளவில் ஒரு தென்னாசிய நாட்டு பார்வையை வெளிப்படுத்ததும்.
மொத்ததில் இலங்கை பிரிக்சில் இணைவது பொருளாதார ரீதியாகவும் ஜியோபாலிடிகல் ரீதியாகவும் மிகுந்த நன்மைகளைத் தரும்.