செய்திகள்

பிரான்ஸ் நாட்டு ‘மேரி கிளேர்’ அழகுக் கலை, திருமண மேக்கப் நிறுவனம் கிளை திறப்பு

Spread the love

சென்னை, ஜூலை 10–

சர்வதேச அழகுக் கலை நிறுவனங்கள் தங்கள் கிளைகளை சென்னையில் நிறுவி வருகின்றன. பிரான்ஸ் நாட்டு அழகுக் கலை நிறுவனமான மேரி கிளேர் தனது கிளையை மயிலாப்பூர் ஆர்.கே. சாலையில் நிறுவி உள்ளது. 100 சலூன்கள், 20 பயிற்சி மையம் நிறுவப்படும் என்று இதை திறந்து வைத்த நிறுவனர் ராபர்ட் புரி தெரிவித்தார்.

இந்தியாவில் இதன் கிளைகளை நிர்வகிக்கும் பிடூசி நெட்வொர்க் விட்டல் ஷெட்டி, சென்னை கிளை ஏஜென்ஸி பிரணாப் நாத், வந்தனா பரத்வாஜ், பயாஸ் சலாதீன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே டெல்லி, பெங்களூர், புனே, ஐதராபாத் நகரங்களில் இதன் கிளைகள், உடல் ஆரோக்கிய மையங்கள் செயல்பட்டு வருகிறது. பாரீஸ் நகர அழகுக் கலை, சென்னை மக்களுக்கு கிடைக்கிறது.

திருமண மேக்கப் மேரி கிளேர் சிறப்பு அம்சமாகும். இதில் அழகுக்கலை நிபுணர்கள் ஆலோசனை வழங்கி, நவீன முறையில் அழகு படுத்துதல், உடல் ஆரோக்கியம், முடி திருத்துதல், தோல் புத்துணர்வு சிகிச்சை, திருமண மேக்கப் போன்றவை இங்கு உண்டு என்று பிரணாப் நாத் தெரிவித்தார்.

சென்னை நகரின் ஷாப்பிங் மால் முக்கிய வணிக பகுதிகளில் மேரி கிளேர் கிளை நிறுவப்படும். பிடுசி நெட்வொர்க் கூட்டுடன் ஆரோக்கிய மையம் இணைந்த 100 சலூன் நிறுவப்படும். 3 ஆண்டுகளில் 20 பயிற்சி மையம் நிறுவி பயிற்சி அளிக்கும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *