செய்திகள்

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் நாளை இந்தியா வருகை

புதுடெல்லி, மார்ச் 30–

பிரான்சிலிருந்து 3 ரபேல் போர் விமானங்கள் நாளை மாலை இந்தியா வருகின்றன.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது.

ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில் அதில் 5 விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தன. அவை முறைப்படி இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன. 2-வது கட்டத்தில் 3 ரபேல் போர் விமானங்களும், 3-வது கட்டத்தில் 3 போர் விமானங்களும் வந்துள்ளன.

இந்நிலையில் 4-வது கட்டமாக நாளை 3 ரபேல் போர் விமானங்கள் குஜராத்துக்கு வர உள்ளன. பிரான்சில் உள்ள மெரிக்னாக் விமானப் படைத்தளத்தில் இருந்து நாளை காலை 7 மணிக்கு இந்த 3 ரபேல் போர் விமானங்களும் புறப்படுகிறது. எந்த இடத்திலும் தரையிறங்காமல் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்துக்கு இரவு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விமானத்துக்கு தேவையான எரிபொருளை ஐக்கிய அரபு எமிரேட்சின் விமானப் படை விமானம், ஓமன் வளைகுடா பகுதியில் நடுவானில் நிரப்புகிறது.இதன் மூலம் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல், ஏவுகணை இடைமறித்துத் தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் ரபேல் விமானத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்துக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *