செய்திகள்

பிராந்திய மொழி எழுத்தாளர்களை ஊக்குவிக்க அமேசான் கேடிபி நிறுவனம் நடத்தும் போட்டி: டிசம்பர் 14–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Spread the love

சென்னை, நவ.10–

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பிராந்திய மொழி எழுத்தாளர்களையும், ஆங்கில எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும்விதத்தில் அவர்களுக்கான படைப்புகளை வெளியிடும் போட்டியை பிரபல அமேசான் கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் தமிழ், இந்தி மற்றும் ஆங்கில எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளை அடுத்த மாதம் 14ம் தேதிக்குள் அமேசான் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழ் படைப்புகளை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் பிரபல நூல் ஆசிரியர்கள் பா.ராகவன், சரவண கார்த்திகேயன் இடம் பெற்றிருக்கிறார்கள். இதேபோல ஆங்கில படைப்புகளை தேர்ந்தெடுக்கும் நடுவர்களாக துர்ஜாய் தத்தா, சுதா நாயர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ஹிந்தி படைப்புகளுக்கு திவ்யா பிரகாஷ் டுபே நடுவராக இருப்பார்.

குறுகிய அளவில் படைப்புகள் இருக்க 2000 வார்த்தைகளில் இருந்து அதிகபட்சம் 10,000 வார்த்தைகளுக்கு உள்ளும், நீண்ட வடிவில் இருந்தால் 10 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேலும் இருக்கவேண்டும் என்று அமேசான் பப்ளிஷிங் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இது படைப்பாளிகளுக்கு நடத்தப்படும் மூன்றாவது போட்டி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

படைப்பாளிகள் சுயமாக அதுவும் இலவசமாக தங்கள் படைப்புகளை ஆன்லைனில் வெளியிடுவதற்கு ஒரு அருமையான வாய்ப்பை இதன் மூலம் அமேசான் கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் நிறுவனம் உருவாக்கி தந்திருக்கிறது.

இந்த சுய வெளியீட்டு முயற்சியில் அதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும், சுய வெளியீட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அமேசான் சென்னை கோபாலபுரத்தில் உள்ள ‘ரைட்டர்ஸ் கேப்’ கட்டிடத்தில் கலந்தாய்வு விவாத கூட்டத்தை நடத்தியது. இதில் பிரபல இயக்குனரும், எழுத்தாளரும், விமர்சகருமான கேபிள் சங்கர், அமேசான் கிண்டில் டைரக்ட் நிறுவனத்தின் ஆசிரியர்களான ராகவன், சரவணகார்த்திகேயன் பங்கேற்றார்கள். நிறுவனத்தின் சார்பில் வைஷாலி அகர்வால் பங்கேற்றார்.

அமேசான் நிறுவனம் சுயமாக வெளியிடும் இந்த படைப்புகளை பொதுமக்கள் தங்களின் மொபைல், டேப்லட், கம்ப்யூட்டர் மற்றும் கிண்டில்–இ ரீடர் மூலம் படித்து ரசிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *