செய்திகள்

பிரபல கேளிக்கை பேச்சாளர் குணால் கம்ரா நிகழ்ச்சி: பீனிக்ஸ் மாலில் சிரிப்பு மழை

சென்னை, ஜூலை 10–

அரசியல், நடப்பு நிகழ்ச்சிகளை வைத்து கேளிக்கையாக பேசி துவக்கம் முதல் முடிவு வரை, பார்வையாளர்களை இடைவிடாது சிரிப்பில் ஆழ்த்திய குணால் கம்ராவின் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பேர் கைதட்டி ரசித்தனர்.

வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் நடைபெற்ற ஷாப்பிங் திருவிழாவையொட்டி குணால் கம்ரா அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார். இவர் சென்னை ஏர்போட்டிலிருந்து மால் வரை வரும் வழியில் பார்த்த நிகழ்ச்சிகள், அரசியல் ஆகியவற்றை கேலியாகப் பேசி சிரிக்க வைத்தார்.

பிரம்மச்சாரிகளின் வாழ்க்கை பற்றிய காமெடி அனைவரையும் சிரிக்க வைத்தது. பார்வையாளர்களின் குறிப்புகளையும் கேளிக்கையாக்கி எல்லோரையும் சிரிக்க வைத்தார்.

பீனிக்ஸ் மால் டைரக்டர் பூஜா பட்டி பேசுகையில், எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, ஷாப்பிங் திருவிழாவை துவக்கி பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். பல்வேறு சலுகைகளை இவ்விழாவில் வழங்குகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *