செய்திகள்

பிரபல கராத்தே வீரர், நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்

Makkal Kural Official

சென்னை, மார்ச் 25-

புன்னகை மன்னன் மற்றும் வேலைக்காரன் படங்களில் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களை ஏற்ற நடிகரும், கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி இன்று அதிகாலை லுகேமியா நோயுடன் நீண்ட காலம போராடத்தில் காலமானார்.

ஹுசைனியின் குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் அவரது மரண செய்தியை பகிர்ந்து, தங்கள் ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். “HU எங்களை விட்டுவிட்டார் என்று தெரிவிக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது,” என அவரது குடும்பத்தினர் ஒரு உணர்வுபூர்வமான பதிவு மூலம் தெரிவித்துள்ளனர். “HU அவரின் உடல் இன்று மாலை வரை அவரின் சென்னையின் பெசன்ட் நகரில் உள்ள High Command இல்லத்தில் இருக்கும்.”

ஹுசைனியின் மரபை நினைவு கூர்ந்த அவரது குடும்பத்தினர், அவரது போற்றுதலுக்காக கராத்தே மற்றும் வில்வித்தை சமூகவிலுள்ளவர்களை தங்கள் அங்கீகார உடையில் வருமாறு அழைத்துள்ளனர். “அன்புள்ள வில்வித்தை வீரர்களே, பெற்றோர்களே, பயிற்சியாளர்களே, HU-வை காண வருவோர் தங்களது யூனிஃபார்ம் (எந்த நிறமாக இருந்தாலும் பரவாயில்லை) அணிந்து வரவும். முடிந்தால், தங்களது வில் மற்றும் அம்புகளுடன் வந்து, சில அம்புகளை செலுத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தவும்” என அவர்கள் கேட்டுள்ளனர்.

இன்று மாலை 5 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் வில்வித்தை வீரர்கள் அம்புகளை செலுத்தி, ஹுசைனியின் ஆத்மாவுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். அதற்கு முன்பாக, மதியம் 3 மணிக்கு கராத்தே பயிற்சியாளர்கள் அவருக்கு மரியாதையாக தங்களது காடாக்களை (கைத்திறன் இயக்கங்களை) கி உடையில் நிகழ்த்துவார்கள்.

இன்றைய நினைவு நிகழ்வுகள் முடிந்தவுடன், ஹுசைனியின் உடல் இரவு 7 மணிக்குப் பிறகு அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.

நல்ல நடிகராக மட்டுமல்லாது, கராத்தே உலகில் பெரும் பெயர் பெற்றவராக விளங்கிய ஷிஹான் ஹுசைனி, தனது அசைக்க முடியாத உறுதியாலும், அர்ப்பணிப்பாலும், தன்னை சுற்றிய அனைவரிடமும் நீங்காத ஈடுபாடு உருவாக்கியவர். அவருடைய நினைவுகள் என்றும் குடும்பத்தினராலும், நண்பர்களாலும், ரசிகர்களாலும் போற்றப்படவே செய்யும்.

#cancer #Blood Cancer #Shihan Hussaini

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *