சினிமா செய்திகள்

பிரபல இந்தி இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்

மும்பை, பிப்.16–

பிரபல இந்தி திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி உடல்நலக்குறைவால் இன்று (16ந் தேதி) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69.

1973ம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற படத்தின் மூலம் இந்திப் படவுலகில் அறிமுகமானவர் பப்பி லஹரி. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் 1985ம் ஆண்டு வெளியான பாடும் வானம்பாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.

1980, 1990 களில் டிஸ்கோ நடனத்தை அறிமுகம் செய்து பிரபலமானவர் பப்பி லஹரி. சிறந்த இசையமைப்பாளராகவும், பாடகராகவும் விளங்கிய பப்பி லஹிரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த திங்கட்கிழமை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் மறுநாளே செவ்வாய்க் கிழமை மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. உடனே டாக்டர் ஒருவரை உடனே வீட்டிற்கு அழைத்து குடும்பத்தினர் சிகிச்சை கொடுத்தனர். ஆனால் டாக்டரின் பரிந்துரையின் பேரில் பப்பி லஹரி உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது. நள்ளிரவில் தூக்கத்திலேயே பப்பி லஹிரி மரணமடைந்ததாக டாக்டர் தீபக் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு படுத்த படுக்கையானர். அங்கு வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்தார். ஏற்றி இறக்கும் விதத்தில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட 3 சக்கர நாற்காலியில் தான் நடமாடினார்.

பப்பி லஹிரி என்றாலே உடல் முழுவதும் தங்கச்செயின் அணிந்து கொண்டு கருப்பு கிளாஸ் கண்ணாடி அணிந்து கொண்டு இருப்பது தான் நினைவுக்கு வரும். 1970, 1980 களில் இந்தி படவுலகில் அதிமான பாடல்களை பாடியிருக்கிறார். கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு பாகி 3 படத்தில் பாடியிருக்கிறார். சொந்தமாகவும் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்தி மட்டுமல்லாது பெங்காலி படங்களிலும் அதிக அளவில் இசையமைத்து பாடியிருக்கும் பப்பி லஹிரியின் உண்மையான பெயர் அலோகேஷ். பலமுறை பிலிம்பேர் விருதுகளைப் பெற்றிருக்கிறார். கிஷோர்குமாரின் ‘பாத் டீ கா நாம் தாதி’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார்.

பப்பி லஹிரி பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

பப்பி லஹிரியின் மறைவுக்கு இந்தி நகடிர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.