செய்திகள் வாழ்வியல்

பிரபஞ்சத்தில் ஒலிக்கும் சத்தம் ; உலகத்திற்கு நிரூபித்த இந்திய தொலைநோக்கி !


அறிவியல் அறிவோம்


பிரபஞ்சத்தின் ரகசியங்களை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் உண்டு. அதற்கான தேடல்களையையும் ஆராய்ச்சிகளையும் இந்தியா உட்பட பல நாடுகள் செய்து வருகின்றன. புதிய கிரகங்கள், புதிய விண்மீன் கூட்டங்களை கண்டுபிடித்து வருகின்றனர். இதற்காக பிரத்யேக தொலைநோக்கி, விண்கலங்கள் கூட இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்கு பின்னும் வானியல் சார்ந்து புது கோட்பாடுகளும் அறிவியல் கிளைகளும் உருவாகி வருகிறது, அந்த வகையில் கடந்த வியாழன் அன்று இந்திய வானியல் ஆய்வு நிறுவனம் ஒன்று அதன் புதிய கண்டுபிடிப்பு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இது அண்டத்தில் உள்ள ஒலியியல் பற்றிய புது பார்வையை தந்துள்ளது.

இந்தியாவின் பெரிய மெட்ரே வேவ் ரேடியோ டெலஸ்கோப்- Giant Metrewave Radio Telescope உலகின் ஆறு பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றாகும். இது ‘அதி-குறைந்த அதிர்வெண் ஈர்ப்பு அலைகளால்'(ultra-low frequency gravitational waves) ஏற்படும் பிரபஞ்சத்தின் இடைவிடாத ஒலி அதிர்வுகளுக்கான முதல் நேரடி ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளது.

புனேவை தளமாகக் கொண்ட ஜிஎம்ஆர்டி தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்திய பல்சர் டைமிங் அரே (இன்பிடிஏ), NCRA (புனே), TIFR (மும்பை), IIT (ரூர்க்கி), IISER (போபால்), IIT (ஹைதராபாத்), IMSc (சென்னை) மற்றும் RRI (பெங்களூரு), ஐரோப்பிய பல்சர் டைமிங் அரேயின் விஞ்ஞானிகள் உட்பட உலகளாவிய விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டனர்.

அண்டத்தில் ‘அம்ம்’ என்ற ஒலி எப்போதும் ஒலிப்பதாக ஒரு கூற்று உள்ளது. ஆனால் அண்டத்தில் காற்று இல்லாத வெறுமை நிலை இருப்பதால் ஒலி அலை பயணிக்க வழியில்லை என்று நாசா உட்பட பல ஆராய்ச்சி நிறுவனங்கள் முன்பு தெரிவித்தன. ஆனால் ஆகஸ்ட் 2022 இல், பெர்சியஸ் கேலக்சி கிளஸ்டரின் மையத்தில் ஒரு பெரிய கருந்துளையின் ஒலியை நாசா கண்டுபிடித்தது.

அதோடு 2019 இல் இருந்து ஐரோப்பிய பல்சர் டைமிங் அரேயின் விஞ்ஞானிகள், இந்தோ-ஜப்பானிய சகாக்களுடன் இணைந்து, உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி மூலம் 25 ஆண்டுகளாக பல்சர் ஒலித் தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு .செய்து வந்தனர். அதன் பின்னர் அண்டத்தில் ஒலி இருப்பதை தற்போது உறுதிசெய்துள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அண்டத்தில் இருக்கும் ஈர்ப்பு அலை மற்றும் அது போன்ற மற்ற அலைகளை பற்றி சொன்னார். வானியலாளர்களால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஒலி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றோடு ஒப்பிடப்பட்டது. அதில் ஈர்ப்பு அலைகள் போன்ற மற்றொரு ஒலி பிரபஞ்சத்தில் இருப்பதாக அவர் கூறியது உறுதியாகியுள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் வானியல் அறிவியலில் இந்தியா மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் உலகின் சக்திவாய்ந்த தொலைநோக்கியின் தாயகமாகவும். அதை கொண்டு வானியலில் புது பார்வையை வெளிப்படுத்திய நாடகவும் மாறியுள்ளது. மேலும் இந்த ‘ஹ்ம்ம்’ சப்தம் அமைதி நிலையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *