பாரிஸ், பிப்.12–
பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக சுந்தர் பிச்சை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாரிசில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமரை சந்தித்தேன். ஏஐ தொழில்நுட்பம் இந்தியாவுக்குக் கொண்டுவரக் கூடிய வியத்தகு வாய்ப்புகள் பற்றியும், எப்படி கூகுள் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்துக்கு பங்களிக்க முடியும் என்பது பற்றியும் ஆலோசனை மேற்கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.