செய்திகள்

பிரதமர் மோடியின் கல்லூரி சான்றிதழ்: பாஜக பயப்படுவதாக ஆம் ஆத்மி விமர்சனம்

டெல்லி, ஏப். 3–

பிரதமர் மோடியின் கல்லூரி சான்றிதழ் பற்றி பேசியவுடன் பாஜக பயப்படுவது ஏன்? என ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய்சிங் விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடி, முதுகலை பட்டபடிப்பு படித்து முடித்துள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான சான்றிதழையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளிப்படுத்தினார். இந்த சான்றிதழ் மீதான விமர்சனம் தொடர்ந்து எழுந்து வந்ததது.

பள்ளிப்படிப்பை தாண்டவில்லை

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி எம்பியும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் சிங் கூறுகையில், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் பற்றி பேச ஆரம்பித்த உடன் பாஜகவினர் பெரும் பதட்டமடைகிறார்கள். அது போலி இல்லை என்று கூற, பாரதீய ஜனதாவினர் கடுமையாக முயற்சி செய்கிறார்கள்.

ஆனால், அந்த பட்டப்படிப்பு சான்றிதழில் உள்ள எழுத்துக்கள் தவறாக உள்ளது என்றும், 2005 ஆம் ஆண்டே பிரதமர் மோடி ஒரு மேடையில் பேசும் போது, நான் பள்ளிப் படிப்பையே தாண்டாதவன் என பேசியதை சஞ்சய் சிங் சுட்டிக்காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *