செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்குகிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்

Spread the love

மதுரை,ஏப்.02–

கொரோனா தொற்று நோயை விரட்டியடிக்க `பிஎம்-கேர்ஸ்’ என்னும் பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாயை வழங்க உள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும் அதை முற்றிலும் ஒழிக்கவும் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாட்டில் உள்ள அனைவரும் தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று `மனதின் குரல்’ என்னும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் இந்த நிதியை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் குழும நிறுவனங்களான டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் லிமிடெட், சுந்தரம் – கிளேடன் லிமிடெட் மற்றும் இதர நிறுவனங்களுடன் இணைந்து வழங்குவதாக அறிவித்துள்ளது. வளமான மற்றும் நிலையான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நிதியை வழங்க இருப்பதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த குழுமத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிறுவனமான சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மூலம் கோவிட் – 19 என்னும் கொரோனா தடுப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக இந்த நிதி உதவியை வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளது.

இது குறித்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவர் வேணு சீனிவாசன் கூறுகையில்:–

இந்த நவீன யுகத்தில் கொரோனா முன்னெப்போதும் இல்லாத பெரும் தொற்றாக உருவெடுத்துள்ளது. இதை எதிர்த்து அழிக்க மனிதகுலம் ஒருங்கே செயல்பட வேண்டும். இதை தடுப்பதற்காகவும் ஒழிப்பதற்காகவும் அரசாங்கம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். தற்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே தேசமாக செயல்பட்டு ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை அளித்து இந்த வைரசை விரட்டியடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். சுகாதார பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு தேவையான உணவு மற்றும் மாஸ்க் உள்ளிட்ட பல்வேறு துணை உபகரணங்களை தயாரித்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *