ஹெல்சிங்கி, செப்.5-–
உலகிலேயே முதன்முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை பயணிகள் தங்களது செல்போனிலேயே சேமித்து வைக்கமுடியும். அதேசமயம் இது அசல் ஆவணங்களை போல நம்பகத்தன்மை வாய்ந்தது. இதன்மூலம் விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும்.
தற்போது இந்த திட்டமானது பின்லாந்து,- இங்கிலாந்தின் லண்டன், மான்செஸ்டர் மற்றும் எடின்பரோ ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு மற்ற நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்துக்காக ஐரோப்பிய ஒன்றியம் சுமார் ரூ.20 கோடி நிதியுதவியை பின்லாந்துக்கு வழங்குகிறது.