செய்திகள்

பிச்சைக்காரர் நலன் தொடர்பான அனைத்து பிரிவுகளும் சமூக நலத்துறைக்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, அக்.8-

பிச்சைக்காரர் நலன் தொடர்பான அனைத்து பிரிவுகளும் சமூக நலத்துறைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயலாளர் ஆர்.ஆனந்தகுமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த பிப்ரவரி 2ந்தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பிச்சை எடுப்பது மற்றும் பிச்சை எடுப்பு தடுப்பு சட்டம் உள்பட அதுதொடர்பான அனைத்து பிரிவுகளையும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதை அரசு கவனமுடன் பரிசீலித்து பிச்சை எடுப்பது, பிச்சை எடுப்பு தடுப்பு சட்டம், பிச்சைக்காரர் நலன் போன்ற அனைத்து பிரிவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் இருந்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு மாற்ற ஆணையிடப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விதிகளில் திருத்தங்களை மனிதவள மேலாண்மைத்துறை தனியாக அறிவிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *