வாழ்வியல்

பிசின்கள் இல்லாது ஒட்டக்கூடிய ஒட்டு முறை; ஜப்பான் கண்டுபிடித்தது

இரு பொருள்களை ஒட்டுவதற்கு கோந்து தேவை. கோந்து , பிசின், ஒட்டு ரசாயனங்கள் இல்லாது இரண்டு மேற்பரப்புகள் ஓட்டுவது மிகக்கடினம். எனினும் ஜப்பானின் ஒசாகா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் பிசின்கள் இல்லாது ஒட்டக் கூடிய ஒட்டு முறையொன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இம்முறையானது ஒட்டு மேற்பரப்பின் மூலக்கூறுகளின் பிணைப்பு ரசாயனத்தை உபயோகித்து இரண்டு மேற்பரப்பு களை ஒட்ட செய்கிறது. ஆரம்பத்தில் PTFE (polytetra fluoro ethylene) மேற்பரப்பின் மீது 200 டிகிரி செல்சியஸில் உள்ள ஹீலியம் பிளாஸ்மாவின் மீது செலுத்தும் போது அது ரப்பர் மீது ஒட்டக்கூடிய தன்மையைப் பெறும். எனினும் வல்கனைசுப் படுத்தப்பட்ட ரப்பர் மீது ஓட்டுவது கடினம்.

இதன்போது ஹீலியம் வாயுவுக்கு பதிலாக நைட்டிரசன் ஆக்சிஜன் கலவையை பிளாஸ்மாவாக மாற்றி மேற்பரப்பு மீது வேகமாக செலுத்தும் போது மேற்பரப்பிலுள்ள சிலிக்கான் இணைப்புகள் உடைந்து சிலநொல் (Si-OH) ஆக மாறும். சிலநொல் மேற்பரப்பு அதிக தாக்கத்திறன் கொண்டது. அதிக அழுத்தத்தில் சிலநொல், ஒட்டு மேற்பரப்பில் உள்ள ஆக்சிஜன் மூலக்கூறுகளுடன் ஐதரசன் பிணைப்பை ஏற்படுத்தும். மேலும் இப் இணைப்பு கார்பன் ஆக்சிஜன் சிலிக்கன் பங்கீட்டு இணைப்புகளாக மாறும். இதனால் பலமான இணைப்பொன்று ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *