சினிமா செய்திகள்

‘பிக் பாஸ்’ புகழ் நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்

சென்னை, அக்.28–

இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமார் திருமணம், இன்று காலை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் எளிமையாக நடந்தது. திருமணத்தில் சின்னத்திரை நடிகர் – நடிகைகள், உறவினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமாக ஹரிஷ் கல்யாண் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி உள்ளார். சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அறிந்து அறிந்து, சட்டப்படி குற்றம், வில் அம்பு ,தாராள பிரபு என பல நடித்திருக்கிறார். தற்போது இவர் டீசல் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *