Uncategorized சினிமா செய்திகள்

பிக்பாஸ் சீசன் 5இல் என் பெயரை நீக்குங்கள்: பிரபல நடிகை

சென்னை, செ. 8–

பிக்பாஸ் சீசன் 5இல் நான் கலந்து கொள்ளவில்லை என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் 4 சீசன் முடிந்த நிலையில், தற்போது சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5இல் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. அதில் பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பிக்பாஸ் சீசன் 5இல் கலந்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வந்தன. இதையடுத்து அவர் தான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைத்தள பக்கத்தில், ‘பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில் ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரைப் பார்க்கிறேன். நான் பிக்பாஸ் தமிழ் 5ஆம் சீசனில் இல்லை. பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து பிக்பாஸ் சீசன் 5இல் லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *