செய்திகள்

பிஎஸ்எல்வி சி-51 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

ஸ்ரீஹரிகோட்டா, பிப்.28

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் ‘அமேசோனியா – 1′ செயற்கைக் கோள் உள்ளிட்ட மொத்தம் 19 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்நிலையில் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “பி.எஸ்.எல்.வி சி-51, அமேசானியா -1 ஐ இன்று அதன் துல்லியமான சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக ஏவியது என்று அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பணியில், பிரேசிலால் வடிவமைக்கப்பட்ட மற்றும் இயக்கப்படும் முதல் செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவுவதில் பெருமையும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த சாதனைக்காக விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *