செய்திகள்

பாவேந்தர் பாரதிதாசனுக்கு 134-வது பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரவணக்கம்

சென்னை, ஏப்.29–

பாவேந்தர் பாரதிதாசனின் 134–-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் வாழ்த்துச் செய்தி.

அதிர் அவர் கூறியிருப்பதாவது:–

“தமிழ் எங்கள் உயிரென்பதாலே – வெல்லுந்

தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”

“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு

திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!

எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்

புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!”

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *