சிறுகதை

பால் கொழுக்­கட்டை… | ராஜா செல்­ல­முத்­து

Spread the love

“அம்­மாவின் பக்­குவம் அலாதி அழ­கு…”

” பொழுது செங்­க­மங்­க­லா இருக்கும் போதே அம்மா எந்­தி­ருச்­சிரும். வீடு வாச­கூட்டி, ஏன மெல்லாம் துலக்கி எடுக்கும் போது தான் லேசா விடியும் வானம்.

“ஏலேய், எந்­தி­ரிங்­கடா. நடு­வா­னத்­துக்கு சூரியன் சுள்­ளுன்னு அடிக்­குற வர சுருண்டே கெடப்­பா­னுக ஏலேய், நடு­­வு­ல­வனே…., நீ தான் எந்­தி­ரிக்­கவே மாட்ட, இன்­னைக்­கா­வது வெரசா எந்­தி­ரிச்சு பல்­லக்­கில்ல விளக்கிக் கஞ்சி குடிக்­கிற வழியப் பாரு. ஏலேய்” என்று நடு­வுலவன் போர்த்­தி­யி­ருந்த போர்­வையை விசுக் என உரு­வினாள்.

“யம்மோவ், சும்­மா­யி­ருக்க மாட்­டியா? இன்னும் செத்­த­நேரம் தூங்­குனா எதுவும் கொறஞ்சு போகாது. அப்­பெறம் எந்­தி­ரிக்­கி­­றனே.

ஏலேய் மூத்­த­வனே, கடைக்­குட்டி ரெண்டு பேரும் எந்­தி­ரிங்க இன்­னைக்கு வீட்­டுல பால் கொழுக்­கட்ட, நடு­வு­ல­வ­னுக்கு இல்ல நீங்க ரெண்டு பேரு­மட்டும்

என்­னென்ன செஞ்சு சாப்­பி­ட­னு­மோ அத செய்யுங்க. அந்த தூங்கு மூச்சி பய அப்­ப­டியே கெடக்­கட்டும் என்று அம்மா சொன்ன போது என்­ன­து பால் கொழுக்­கட்­டையா? ஊத்த வாயே­ாடு எழுப்­பிய நடு­வு­லவன் .

“யம்­மோவ், எங்க பால் கொழுக்­கட்ட

“டேய், போயி மொதல்ல தூங்கி வழிஞ்­சிட்டு இருக்­கிற மூஞ்­சிய மொதல்ல கழு­விட்டு வா. பால் கொழுக்­கட்­டன்னு சொன்­னதுமே வாய பொழுந்­திட்டு வருவான். போடா போயி மூஞ்­சிய கழு­விட்டு வா.’’ அம்மா விரட்­டவும்

இந்தா என்று ஓடிய நடு­வு­­லவன் தொட்­டி­யி­லி­ருந்து தண்­ணியைத் தொட்டு மூஞ்­சியைக் கழு­வினான்.

ஏய் ஓடியா போகப் போகுது.

நல்­லாதான் மூஞ்­சிய கழு­விட்டு வாடா. திங்­கி­ற­துன்னா ஒடனே ஓடி­வ­ரு­வான்.

எங்க எங்க, பால் கொழுக்­கட்ட . ஆவலாய்த் தேடி­ய­வனின் முன்னால் “பட்” என பச்­சை­ய­ரிசி மாவை வைத்தாள் அம்மா

என்­னம்மா மாவா இருக்கு “ம்” விடி­யி­ற­துக்­குள்ள ஒனக்கு வடிச்சு வச்­சி­ருப்­பாங்­களா? போடா பள்­ளிக்­கொடம் போய்ட்­டுவா. சாயங்­காலம் பாக்­கலாம்.

“மம்ம்­” வேணாம்மா. இப்­பவே பால் கொழுக்­கட்ட வேணும். ம்ம்ம் என்று அழுது அடம்­பித்த நடு­வு­ல­வனை போடா சாயங்­காலம் வா. விடாப்­பி­டி­யாக விரட்­டி­னாள், அம்மா.

“டேய், இவன என்­னன்னு கேளுங்­கடா” என்ற போது தலை­தெ­றிக்க ஓடி­னான் நடுவு­ல­வன் . அன்று பள்ளிப் பாடங்கள் நடு­வு­லவன் தலையில் ஏறவே இல்லை; பால்க்­கொ­ழுக்­கட்­டையே அவன் மனம் முழு­வதும் பர­வி­யி­ருந்­தது. வீட்­டுக்கு வந்­ததும் வரா­த­துமாய்

“அம்மா மாவு எங்க?

“ஏண்­டா?

“­கு­டும்மா’’

“விட மாட்­ட­ியே…’’

“அங்­கன இருக்கு பாரு” என்று சில்வர் சுட்­டி­யி­ருக்கும் இடத்தைக் காட்ட

ஓடிப் போய் சட்­டியை நடு­வு­லவன் எடுக்­கவும் உடன் ஓடிவந்தனர்.

கடைக்குட்டியும் மூத்தவனும் “­ஏலேய், நான் அம்மியும் கொழவியும் செய்யுறேன். நீங்க என்ன பண்ணப் போறீங்க?

“­நான் ஆட்டுக்கல்லு”­

“­ஏய், நானு ஒரலு செஞ்சுக்கிறேன்.

நான் சூலாயுதம் பண்ணிக்கிறேன்.

பிள்ளைகள் ஆளாளுக்கு தங்களுக்குப் பிடித்ததைச் செய்ய, அம்மா கருப்பட்டியை உடைத்துப் போட்டு பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

அம்மா நான் தான் அம்மி ஒரலு செஞ்சு போட்டுருக்கேன். எனக்குத் தான் அதத் தரணும் அம்மா எனக்கு ஆட்டுக்கல்லு,

எனக்கு சூலாயுதம் என்று பிள்ளைகள் சொல்ல,

இந்தா மொதல்ல குடுங்கடா என்று பிள்ளைகள் செய்த பொருட்களோடு உருண்டைகளையும் உருட்டி, வெந்து கொண்டிருக்கும் கருப்பட்டிப் பாலில் மொது மொதுவெனப் போட்டாள்.

கொதிக்கும் சக்கரைப் பாலில் மாவு உருண்டை விழவும் வெந்து கொண்டிருக்கும் இனிப்பு வெளியேவந்து சுகந்தம் சேர்ந்தது.

அடுப்படியைச் சுற்றியே அத்தனை குழந்தைகளும் ஒன்று கூடி உட்கார்ந்தார்கள்.

“­ஏய் எந்திரிச்சு போங்கடா. வெந்தா கூப்பிட மாட்டனா?

இப்படி சுத்தி ஒக்காந்தா என்ன அர்த்தம். எந்திரிங்கடா. அம்மா விரட்டிவிட்டும் எந்தப் பிள்ளைகளும் அமர்ந்த இடத்தை விட்டு அகலவேஇல்லை

கொதக் கொதக் என்று வேகும் போது இனிப்பு நாவில் ஏறி மூக்கில் வழிந்தது.

“­ம்ஹீகும், இன்னைக்கு இவனுக போக மாட்டானுக என்ற அம்மா வேகும் கொழுக்கட்டைக்குள் கரண்டியை விட்டு லாவகமாகக் கிண்டினாள்.

அம்மா பாத்தும்மா பாத்து

“­என்னோட அம்மி ஒடைஞ்சிரப் போகுது,

“­டேய்…. எனக்கு தெரியும்டா’’,

எனக்கே கோளாறு சொல்ற?

கொழுக்கட்டையைக் கிண்டிக் கொண்டிருந்த அம்மா

அவனவன் வட்டிய எடுத்திட்டு வாங்கடா”­ என்று சொன்னது தான் தாமதம் அம்புட்டுப் பயலுகளும் வட்டியுடன் வந்து உட்கார்ந்தனர்.

“­என்னோட அம்மி ஒடைஞ்சிரப் போகுது’’

“­டேய் எனக்கு தெரியும்டா. எனக்கே கோளாறு சொல்ற?

கொழுக்கட்டையைக் கிண்டிக் கொண்டிருந்த அம்மா,

அவனவன் வட்டிய எடுத்திட்டு வாங்கடா என்று சொன்னது தான் தாமதம் அம்புட்டுப் பயலுகளும் வட்டியுடன் வந்து உட்கார்ந்தனர்.

“­அம்மா எனக்கு அம்மி ஒரலு சூலாயுதம். எனக்கு ஆட்டுக்கல்லு’’ என்றவர்கள் சுற்றி உட்கார

அம்மா சக்கரைப் பாலோடு அள்ளிப் போட்டாள். உர் உர்ன்னு பாலை உறிஞ்சிய பிள்ளைகள்

“­அம்மா ஒனக்கு? “­

“­எனக்கு இருக்குடா”­ மொதல்ல நீங்க தின்னுங்க”­

என்ற போது

அத்தனையும் பிள்ளைகளுக்கு வழித்துப்போட்டுவிட்டு வெறுமனே இருந்தாள் அம்மா.

“­அம்மா நாளைக்கும் பால் கொழக்கட்டை போடும்மா”­ பிள்ளைகள் சொல்ல

“­ம்”­ போடலாம்டா’’. மொதல்ல நீங்க நல்லா சாப்பிடுங்க

“­ம்”­ சாப்பிட்டோம். நினைவுகள் எல்லாம் நெஞ்சில் வந்து நிறைய அப்போதிருக்கும் வயதில் அம்மா சாப்பிட்டதா? இல்லையா? என்பது தெரியவில்லை.

இன்று நினைத்தால்…… அம்மா எவ்வளவு அன்பென்று இப்போது தெரிகிறது.

ஆனால் சொல்லிக் கொள்ளத்தான் அம்மா இன்று உயிரோடு இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *