செய்திகள்

பாலூர் ஸ்ரீ பாலபதங்கீஸ்வரர் திருக்கோயிலுக்கு திருப்பணி செய்திட தொல்லிய வல்லுநர் ஆய்வு

காஞ்சீபுரம்,மே.16-–
செங்கல்பட்டிலிருந்து காஞ்சீபுரம் செல்லும் வழியில் பாலூர் கிராமத்தில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ பாலபதங்கீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். தற்போதுள்ள கோயில் முதலாம் பராந்தக சோழன் கட்டியதாகும். அகத்திய முனிவர், பதங்க முனிவர், மார்கண்டேயர், சூரியன் ஆகியோர் இங்கு வந்து வணங்கி அருள் பெற்றுள்ளனர்.
2007 -ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது கும்பாபிஷேகம் செய்து 14 ஆண்டுகள் கடந்து விட்டது.
எனவே இந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக முதற்கட்டமாக மத்திய தொல்லியல் வல்லுநர் எஸ்.ஜெயகரன் கோயிலுக்கு வருகை தந்து செய்ய வேண்டிய திருப்பணிகள் குறித்து முழுவதுமாக ஆய்வு செய்தார்.
அவருடன் கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், பாலூர் பரசுராமேஸ்வரர் கோயில் திருப்பணி தலைவர் கே.ஆர்.கபிலன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *