செய்திகள் வாழ்வியல்

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வெந்தயக் கீரை

Makkal Kural Official

நல்வாழ்வுச் சிந்தனை


வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது. நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது. இது எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற படி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும்.

வெந்தயக் கீரை புதிய பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கெட்ட சுவாசத்தை தடுக்கிறது. இத்தகைய வெந்தயத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டு உள்ளன. இந்த இரும்புச் சத்துப் உடலில் ஏற்படும் ரத்தசோகையை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்குச் காய்ச்சி, காலை மாலை குடித்து வர நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும். உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும்.

கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *