செய்திகள்

பாலுச்செட்டிசத்திரம் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

பாலுச்செட்டிசத்திரம் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா :

அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

காஞ்சீபுரம், ஜூன் 30-–

காஞ்சீபுரம் அடுத்த பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் வெற்றிச்செல்வன். இவர் 26ம் தேதி திருப்புட்குழியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து நேற்று அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையொட்டி அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் அங்கு பணிபுரியும் சப்–-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சுகாதாரத்துறையினர், பாலுச்செட்டிசச்திரம் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *