செய்திகள்

பாலியல் தொழிலாளர்கள் அதிகமுள்ள மாநிலம் ஆந்திரா: இந்திய அரசு தகவல்

ஐதராபாத், டிச. 21–

நாட்டிலேயே ஆந்திர மாநிலத்தில் தான் அதிகளவில் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:–

பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் நாட்டிலேயே ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. எச்.ஐ.வி.யைக் கட்டுப்படுத்தத் தொடங்கப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், புலம் பெயர்ந்த பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலிருந்து பூர்வீக பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை பிரிக்கப்பட்டு உள்ளது.

புலம் பெயர்ந்த ஒட்டு மொத்த பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மகாராஷ்டிர மாநிலம் 6.6 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளது. குஜராத் (2.3 லட்சம்) மற்றும் டெல்லியில் 2.3 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.

பூர்வீக பாலியல்–ஆந்திரா முதலிடம்

ஆந்திர மாநிலத்திவில் 1.33 லட்சம் பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து கர்நாடகா (1.16 லட்சம்) மற்றும் தெலங்கானாவில் (1 லட்சம்) உள்ளனர். புலம் பெயர்ந்த பாலியல் தொழிலாளர்கள் வட மாநிலங்களில் பெரும்பான்மையாக இருந்தாலும், தெற்கில் அவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அங்கு பாலியல் தொழிலாளர்கள் பெரும்பாலும் உள்ளூரைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பல பத்து ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் விபசாரத்திற்கான மனித கடத்தலின் முக்கிய இடமாக உள்ளது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அதிக எண்ணிக்கையிலான பாலியல் தொழிலாளர்களைக் கொண்ட பட்டியலில் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் இருக்கும். மிக முக்கியமாக, இந்த எண்கள் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களை மட்டுமே குறிக்கின்றன. இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் அடையாளம் காணப்படவில்லை. ஆந்திராவில் இருந்து புலம் பெயர்ந்த பாலியல் தொழிலாளர்கள் நாட்டின் அனைத்து மாநிலத்திலும் காணப்படுகிறார்கள்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *