செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு வீடீயோ: கே.டி.ராகவன் திடீர் ராஜினாமா

சென்னை, ஆக. 24–

பாஜகவின் மாநில பொதுச் செயலாளர்களில் ஒருவரான கே.டி.ராகவன், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வீடியோ வெளியானதை அடுத்து, தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகவன் ராஜினாமா

இதுதொடர்பாக கே.டி.ராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்ட பதிவில், ”தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 ஆண்டாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *