செய்திகள்

பாலமேடு பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

Spread the love

அலங்காநல்லூர்,மார்ச்,26–

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி பகுதியில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் நலன் கருதி கோணப்பட்டி, சுக்காம்பட்டி, ராம் நகர், பஸ் நிலையம், வணிக மையங்கள், காவல் நிலையம், தனியார் நிறுவனங்கள், காய்கறி கடைகள், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தடுப்பு மருந்துகளை அதற்கான ஆளுயர உடைகள் அணிந்து தூய்மை பணியாளர்கள் தெளித்தனர். தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இதில் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், முகக் கவசங்கள் அணிய வேண்டும், அசுத்தமான கைகளுடன் அடிக்கடி முகம், கண், ஆகியவற்றை தொடக்கூடாது. காய்ச்சல், சளி, மூச்சு திணறல், போன்றவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறுங்கள், அடிக்கடி கைகளை அதற்கான சோப்பை கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். சுகாதாரத்தை முழுமையாக கடை பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விழிப்புணர்வு வாசகங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமுருகன், இளநிலை உதவியாளர் அங்கயர்கன்னி, தூய்மைபணி மேற்பார்வையாளர் கனகராஜ், மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இந்த தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *