அறிவியல் அறிவோம்
மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன்படும் ஒரு பிரத்தியேகமான ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ஒன்றை கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இத்தகைய பிரத்தியேகமான ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை இவர்கள், ஆம்ப்ரேன் இந்தியா பிரைவேட் லிமிடெட் உடன் சேர்ந்து உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹாப்டிக் என்பது தொடும் போது ஏற்படும் உணர்வுகள் மூலம் செயல்படுவதைக் குறிக்கிறது. இந்த ஹேப்டிக் ஸ்மார்ட்வாட்ச், இரண்டு வேரியண்டுகளில் வருகின்றது.
மேலும் அதில் பன்னிரண்டு மணி நேரங்களையும் குறிக்கும் டச் சென்சிடிவ் மார்க்கர்களும் பொருத்தப்பட்டுள்ளது. அந்த மார்க்கர்களைப் பயனாளர்கள் தங்களது விரல்களால் ஸ்கேன் (Scan) செய்து கொள்ள வேண்டும். இந்த ஹாப்டிக் வாட்சுகள், பார்வை இழந்தவர்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இன்றைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த மிகவும் உதவிக்கரமாக இருக்கும் என்று ஐஐடி கான்பூரில் தலைவர் பேராசிரியர் அபே கரண்டிகர் தெரிவித்துள்ளார்.இந்த ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச் உருவாக்குவதில் மட்டுமே ஐஐடி கான்புரை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கு வகிக்கின்றனர். அதனை விற்பனை செய்யும் பொறுப்பு, ஆம்ப்ரேன் இந்தியா வசம் உள்ளது. இந்த ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச்சுகள் மலிவான விலைக்கு இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.
மேலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஐஐடி கான்பூருக்கு இருக்கும் ஆர்வத்திற்கும் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்த ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று பேராசிரியர் அபே கரண்டிகர் தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்மார்ட் வாட்ச் டச், டாக்டிக், (Tactic) மற்றும் வைப்ரேஷன் ஆகிய மூன்று தொழில்நுட்பங்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஹாப்டிக் வாட்ச் உருவாக்கத்தில் டாக்டிக் தொழில்நுட்பத்தில் இருக்கும் பலவீனத்தையும் வைப்ரேஷனல் வாட்ச் உருவாக்கத்தில் இருக்கும் கடினத் தன்மையையும் அகற்றி சுலபமான முறையில் பயனர் உபயோகிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச்சுகள் மற்ற ஸ்மார்ட் வாட்ச்சுகளைப் போலவே ஹார்ட் ரேட் மானிட்டர் ஸ்டெப் கவுண்டர் , ஹைட்ரேஷன் ரிமைண்டர் , டைமர் என்று அனைத்து வசதிகளும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் வாட்சில் இருக்கும் ஹாப்டிக் ஐகான்களை தொடுவதன் மூலம் மெனுவை மாற்றிக் கொள்ளவும் டாப் செய்வதன் மூலம் குறிப்பிட்ட செயலிகளை பயன்படுத்தவும் முடியும்.