செய்திகள்

பார்வையற்ற 54 பேருக்கு சென்னை விஐடியில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி: சாதனையாளருக்கு லேப்டாப் பரிசு

துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் வழங்கினார்

தாய்க்கரங்கள் அறக்கட்டளை மற்றும் விஐடி (சென்னை) இணைந்து பார்வையற்றவர்களுக்கான 8 நாள் கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் நடத்தின. பயிற்சியில் வெற்றி பெற்றவருக்கு லேப்டாப் பரிசை துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் வழங்கினார்.

சென்னை அடையாறைச் சேர்ந்த பார்வையற்றோருக்கான தன்னார்வ தொண்டு நிறுவனமான தர்ஷினி இந்த பயிற்சியை இணைந்து நடத்தியது.

இப்பயிற்சியை துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், விஐடி சென்னையின் கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், அடையாறு தர்ஷினியைச் சேர்ந்த சௌமியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 54 பேர் பங்கேற்றனர். தொடக்கநிலை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகளில் அடிப்படை கணினி பயன்பாடு தொடங்கி படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆகியவற்றை ஆவணப்படுத்துவதற்கும் எடிட்டிங் செய்வதற்கும் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவது வரை மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டுப் பயிற்சியளிக்கப்பட்டது.

இதன் நிறைவு விழா சென்னை விஐடியில் நடைபெற்றது. விழாவில், விஐடி போபால் அறங்காவலர் ரமணி பாலசுந்தரம் பங்கேற்று சிறந்த செயல்பாட்டாளருக்கு மடிக்கணினி மற்றும் சான்றிதழை வழங்கினார். இதில் பங்கேற்ற அனைவருக்கும் விஐடி போபால் சார்பில் கற்றலை ஊக்குவிக்கும்விதமாக ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தர்ஷினியின் அறங்காவலர்கள், ஜெம் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அசோகன், எம்.எஸ். ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Loading

One Reply to “பார்வையற்ற 54 பேருக்கு சென்னை விஐடியில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி: சாதனையாளருக்கு லேப்டாப் பரிசு

  1. பார்வையாளர் கட்டுரை, பெரிய மனது கல்லூரி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள். உங்களுடைய செய்ககைக்கு ஒரு சல்யூட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *