போஸ்டர் செய்தி

பார்லிமெண்ட் தேர்தலில் டிக்கெட் கேட்டு அ.தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் குவிந்த

சென்னை, பிப்.10–
பார்லிமெண்ட் தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க இன்று கடைசி நாள் என்பதால் இன்று ஏராளமான பேர் மனு கொடுத்தனர்.
அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்திருந்தனர்.
சென்னை மாவட்டத்தில் ஏற்கனவே எம்.பி.யாக இருக்கும் டாக்டர் ஜெயவர்த்தன், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, எஸ்.ஆர். விஜயகுமார் ஆகியோர் அந்தந்த தொகுதிகளில் டிக்கெட் கேட்டு மனு கொடுத்திருக்கிறார்கள்.
பார்லிமெண்ட் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அண்ணா தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைய உள்ளது. இந்த கூட்டணியில் பாரதீய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தந்த கட்சி தலைவர்களுடன் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
தேர்தல் பணியில் அண்ணா தி.மு.க. முழுவீச்சுடன் ஈடுபட்டுள்ளது. அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க தனி குழு, தொகுதி பங்கீடு பற்றி பேச ஒரு குழு, தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படுத்த குழு என தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பார்லிமெண்ட் தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் ஒரு தொகுதிக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தி 4–ந் தேதி முதல் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று விருப்பமனு செய்ய கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
4–ந் தேதி முதல் தினசரி தொண்டர்களும், நிர்வாகிகளும் விருப்ப மனு கொடுத்த வண்ணம் உள்ளனர்.
இன்று விருப்ப மனு கொடுப்பதற்க கடைசி நாள். எனவே விருப்ப மனு கொடுக்க இன்று தலைமை கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.
சென்னையில்
3 எம்.பி.க்களும் மனு
சென்னையில் தென்சென்னை தொகுதிக்கு தற்போது எம்.பி.யாக இருக்கும் டாக்டர் ஜெயவர்த்தனும், மத்திய சென்னை தொகுதிக்கு தற்போதைய எம்.பி.யான எஸ்.ஆர். விஜயகுமாரும், வடசென்னை தொகுதிக்கு தற்போதைய எம்.பி.யான டி.ஜி.வெங்கடேஷ்பாபுவும் விருப்ப மனு அளித்தனர்.
4 தொகுதிக்கு மனு
அண்ணா தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம் போட்டியிட வேண்டும் என தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் தொண்டர்கள் பணம் கட்டி விருப்ப மனு கொடுத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டிக்கெட் கேட்டு முன்னாள் எம்.பி.யும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான காஞ்சி பன்னீர்செல்வம் இன்று விருப்ப மனு கொடுத்தார்.
வடசென்னை தொகுதியில் போட்டியிட மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை முனுசாமியும், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை தலைவர் வி.எஸ். பிரபாகரன், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட லியாகத் அலிகான் ஆகியோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
தென்சென்னை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட வேண்டும் என்றும் தான் போட்டியிடவும் முன்னாள் கவுன்சிலர் எம்.எம்.பாபு இன்று விருப்ப மனு கொடுத்துள்ளார்.
மத்திய சென்னை தொகுதிக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பவானிசங்கர், தேனி தொகுதிக்கு அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் எஸ்.டி.கே. ஜக்கையன் எம்.எல்.ஏ.வின் மகனும் தேனி மாவட்ட மாணவர் அணி செயலாளருமான கே.ஜே.பாலமணிமார்பன், கிருஷ்ணகிரி தொகுதிக்கு சுதாகர் ரெட்டி ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.
இன்று மாலை 5 மணி வரை விருப்ப மனு கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்து ஏராளமான பேர் மனு கொடுத்த வண்ணம் உள்ளனர்.
விருப்ப மனு கொடுக்க வருபவர்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் வந்ததால் அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டம் குவிந்திருந்தனர். மனுக்கள் கொடுக்கும் போது தொண்டர்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.
ஒரு தொகுதிக்கு சராசரியாக 30 முதல் 35 பேர் வரை விருப்ப மனு கொடுத்தனர். 40 பார்லிமெண்ட் தொகுதிக்கும் 1300 பேர் வரை விருப்ப மனு கொடுத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *