செய்திகள்

‘பார்கின்சன்‌’ நோய் பாதிப்பைக் குறைக்கும் ஜப்பான் உணவு

சென்னை பி வெல் மருத்துவமனை மாநாட்டில் தகவல்

சென்னை, ஏப்.16–

ஜப்பானில்‌ தயாரித்த பீட்டா–1,3–1,6 குளுக்கான்‌ (Nichi Brite) உணவுப்பொருளை 9௦ நாட்கள்‌ சாப்பிட்ட பிறகு யூனிஃபைட்‌ பார்கின்சன்‌ நோய்‌ மதிப்பீட்டு அளவில்‌ முன்னேற்றமும்‌ அதாவது குறைப்பதற்கான தீர்வும் மலச்சிக்கலுக்கு தீர்வும்‌ கிடைத்தது. சென்னையில் பி வெல்‌ மருத்துவமனை நடத்திய உலக பார்கின்சன்‌ தின அறிவியல்‌ மாநாட்டில்‌ இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில்‌ நடைபெற்ற அசென்ட் 2023 (அமெரிக்கன் சொசைட்டி ஃபார் எக்ஸ்பிரிமெண்டல் நியூரோதெரபிடிக்ஸ்) ஆண்டுக்‌ கூட்டத்தில்‌, இந்த முடிவுகள்‌ பகிரப்பட்டது. இது உலகளாவிய கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தீங்கு விளைவிக்கும்‌ குடல்‌ நுண்ணுயிரிகளை முழுமையாகக்‌ கட்டுப்படுத்துவதன்‌ மூலம்‌ ஆட்டிசம்‌ பாதிக்கட்ட குழந்தைகளின்‌ குடலில்‌ அசாதாரண ஆல்பா சைனுக்களின்‌ புரதங்களின்‌ திரட்டை பீட்டா குளுக்கான்‌ குறைக்க முடியும்‌ என்ற முந்தைய மருத்துவ ஆராய்ச்சியின்‌ கண்டுபிடிப்பும்‌, அப்படி குடலில்‌ திரளும்‌ புரதங்கள்‌ மூளைக்கு சென்று பார்கின்சன்‌ உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும்‌ என்ற கணிப்பும்‌ இந்த மருத்துவ ஆராய்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

பார்கின்சன்‌ என்பது ஒரு மூளைச் சிதைவு நோய்‌. இதனால் சுமார்‌ 10 லட்சத்திற்கும்‌ மேற்பட்டோர்‌ இந்தியாவிலும்‌ அமெரிக்காவிலும்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌.

அமெரிக்காவின்‌ டெக்ஸாஸ்‌ ஹூஸ்டன்‌ மெதடிஸ்ட்‌ பல்கலைக்கழத்தை சேர்ந்த உலகின்‌ முன்னோடி ஆராய்ச்சியாளரான பேராசிரியர்‌ முரளிதர்‌ ஹெக்டே, ஆல்பா-சினுக்ளின்‌ தொடர்பான அசாதாரணங்கள்‌, லெவி புரததிரட்டு ஆகியவை மூளைச்சிதைவுக்கும்‌, பார்கின்சன்‌ நோய்‌, லூயி பாடி டிமென்ஷியா (Dementia) மற்றும்‌ அல்சைமர்‌ (Alzheimer’s Disease) நோய்க்கு வழிவகுக்கிறது என்றும்‌ விளக்கினார்‌. ஐதராபாத்தைச்‌ சேர்ந்த டாக்டர்‌ ருக்மணி மிருதுளா, இந்தியாவில்‌ இளம்‌ வயதிலேயே பார்கின்சன்‌ நோய்‌ அதிகரித்து வருவதைப்‌ பற்றி தெரிவித்தார்‌.

நிச்சி ப்ரைட் பீட்டா குளுக்கன்‌ சாப்பிட்டதைத்‌ தொடர்ந்து 1௦4 வயது நோயாளிக்கு நடுக்கம்‌ காணாமல்‌ போனதாக இத்தாலியைச்‌ சேர்ந்த பேராசிரியர்‌ எஜியோ காக்லியார்டின் விளக்கக்காட்சி அனைவரின் கவனத்தையும்‌ ஈர்த்தது.

இதுபோன்ற மூளைச்சிதைவு நோய்களில்‌ ஆரம்பகால நோயறிதல்‌ மற்றும்‌ தலையீடு மிகவும்‌ முக்கியமானது என்றும்‌, பார்கின்சன்‌ நோயின்‌ அறிகுறிகளுடன்‌ வரும் நோயாளிகளுக்கு தகுதி வாய்ந்த நரம்பியல்‌ நிபுணர்கள்‌ மூலம்‌ பி வெல்‌ மருத்துவமனைகள்‌ சிகிச்சையை வழங்குவதாக நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்‌ டாக்டர்‌ வெற்றிவேல்‌ கூறினார்‌.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *