பாரீஸ், ஆக. 2–
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், இன்று நடந்த வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா- – தீரஜ் ஜோடி 5-–1 என்ற கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.