தலையங்கம்
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுகள் சீனாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைப் புகழை ஈட்டுத் தந்து இருக்கிறது, .இம்முறை பல்வேறு விளையாட்டுத் துறைகளில் சாதனைப் படைத்தது, உலக அரங்கில் அந்நாட்டின் போட்டித்திறனை மட்டுமின்றி இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் தடம்பதித்தும் சென்றுள்ளது.
வழக்கமாக சிறந்து விளங்கும் துறைகளான டைவிங் மற்றும் டேபிள் டென்னிஸில் சீன வீரர்கள் ஆதிக்கம் தொடந்தது, நீர் விளையாட்டுகளில் எட்டு மற்றும் டேபிள் டென்னிஸில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்தனர். ஒலிம்பிக்கில் ஒரே தொடரில் இவ்வளவு அதிக பதக்கங்களை கைப்பற்றியது சீனாவின் ஆதிக்கத்தையே வெளிப்படுத்துகிறது.
முன்பெல்லாம் அதிக கவனம் செலுத்தப்படாத நீச்சல் போட்டியிலும் சீன அணியின் சாதனை கவனிக்கத்தக்கது. இந்த ஆண்டு சீன நீச்சல் அணியும் மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்றது, இதில் இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இது ஒலிம்பிக் வரலாற்றில் சீனாவின் மிகப்பெரிய சாதனையாகும்.
அது மட்டுமா?, 21 வயதான ஜெங் கின்வென், ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் ஆசிய வீராங்கனையாக வரலாறு படைத்தார்.
அமரிக்கர்களும் ஐரோப்பியர்களும் ஆதிக்கம் செய்த அந்த கோட்டையில் அவரது வெற்றி சீனாவின் புத்வேக திறனுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறது.
சீனாவின் பாரிஸ் ஒலிம்பிக் வெற்றிகளில் அவர்கள் முன்பெல்லாம் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளில் இருந்து வந்த 27 தங்கப் பதக்கங்கள் அவர்களது விடா முயற்ச்சிகளுக்கு நல்ல முன் உதாரணம்.
மொத்தம் 40 தங்கப் பதக்கங்களுடன், 91 மொத்த பதக்கங்களுடன் சீனா பாரிஸ் 2024ஐ நிறைவு செய்தது. இது லண்டன் 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் சீனாவின் வெளிநாட்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் அதிக எண்ணிகை சாதனையாகும்.
இந்தச் சாதனைகள், சீனாவின் பரந்த அளவிலான விளையாட்டு திறன்களையும் நீச்சல் மற்றும் டென்னிஸ் போன்ற புதிய துறைகளில் இளம் வீரர்களின் வெற்றிகள், அவர்களின் திறன் வளர்ப்பு பயிற்சிகளின் சிறப்புகளையும் வெளிச்சப்படுத்துகிறது.
சீனாவின் வெற்றி இந்தியாவுக்கு இளம் திறமைகளை ஊக்குவித்து, விளையாட்டு துறைகளில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை நினைவுறுத்துகிறது. சீனாவின் விளையாட்டு வளர்ச்சி மற்றும் போட்டித்திறனை இந்தியா கவனத்தில் கொண்டு நமது விளையாட்டுத் துறையை மேம்படுத்துமாறு பாடம் பெற்றாக வேண்டும்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் சிறப்புகள் உலகின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு புதிய உத்வேகம் தரும் சமாச்சாரமாகும்.