புதுடெல்லி, செப். 7–
பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு திரும்பிய இந்திய வீரர்களுக்கு புதுடெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது. நாளையுடன் இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன்.இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பாரீசில் இருந்து இன்று காலை புதுடெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர். துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அவனி லெகரா மற்றும் பிரனவ், மோனா அகர்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.