செய்திகள்

பாரா ஒலிம்பிக்கில் 2-வது பதக்கம் வென்று அவனி லெகாரா சாதனை

டோக்கியோ, செப். 3–

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா,

முன்னதாக 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்ததன் மூலம், ஒரே பாரா ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்கள் வென்று வரலாறு படைத்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 2 பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்திய அவனி லெகாரா, இன்று நின்ற நிலையில் துப்பாக்கிச் சுடுதலில் 15 ஷாட்கள் அடித்து மொத்தம் 149.5 புள்ளிகள் பெற்று அட்டவணையில் 4 ஆம் இடத்தில் இருந்தார். படுத்த நிலையில் சுடுதலில் 50.8., 50.3, 48.4 என்று புள்ளிகளைப் பெற்றதில் மொத்தமாக 149.5 புள்ளிகள் வென்றார்.

வெள்ளிப் பதக்கம்

பிறகு 3 ஆம் இடத்துக்காக உக்ரைனின் ஷேட்னிக்குடன் இவருக்கு போட்டி ஏற்பட்டது. இதில் அவனி லெகாரா 10.5 புள்ளிகள் எடுக்க உக்ரைன் வீராங்கனை 9.9 புள்ளிகள் மட்டுமே பெற்று பின் தங்கினார். இதன் மூலம் அவனி வெண்கலம் வென்றார். இதன் மூலம் நடப்பு பாராலிம்பிக் தொடரில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளது.

கார் விபத்து மூலம் வாழ்க்கையே மாறிப்போனாலும், ஜெய்பூரைச் சேர்ந்த அவனி, டோக்கியோவில் சாதித்துக் காட்டியிருக்கிறார். அவர் கடைசி நாளான செப்டம்பர் 5 ந்தேதி 50 மீட்டர் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆகியவற்றில் பங்கேற்க உள்ளதால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *