சிறுகதை

உற்சாகத்தோடு உழையுங்கள் வெற்றி ஊற்றாகும் | ராஜா செல்லமுத்து

Spread the love

மலையோரத்தில் உள்ள அந்தப் பள்ளிக் கூடத்தில், ” சர்சர்” ரென வீசிக் கொண்டிருந்தது, காற்று “வாஞ்சி, தன் ஆசிரியப் பணிகளில் மூழ்கிக் கிடந்தார்.

அவர் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும் நேரம்.

எங்க சொல்லுங்க பாப்போம் வாழைப்பழம் நழுவிப்பாலில் விழுந்தது.

“ழ” உச்சரிப்பை அவ்வளவு அழகாக உச்சரித்து தமிழக்கு சிறப்பு சேர்த்தார்.

“சார் எனக்கு “ழ” வர மாட்டேங்குது . ஏன் வராது உள்நாக்க உள்ள மடிச்சு வச்சு, “ழ” சொல்லுங்க என்று வாஞ்சி உச்சரிக்கும் அழுகை, குழந்தைகள் ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கம்பி ஜன்னல் வழியாக ஆண்டி மலைக்காற்றின் வேகம், கம்பிக் கதவையே குப்புறத் தள்ளி விடும் அளவிற்கு அவ்வளவு வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.

“சார், இந்த ஆணை மலை காத்து ரொம்ப நல்லா அடிக்குது. இந்த காத்து உடம்புல பட்டதும் ஒரு மாதிரியா இருக்கு சார், இந்த காத்துக்கு ஏதாவது விசேசம் உண்டா? என்று ஒரு மாணவன் கேட்க,

“ம்ம்” பெரிய மனுசன் மாதிரி கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்ட, ஆனைமலையில ஒரு அதிசயமே இருக்காம்டா, அங்க புதையல் இருக்கிறதா சொல்றாங்க

“அப்பிடியா?”

“ஆமாங்கடா, இங்க இருக்கிற எல்லார்கிட்டயும் விசாரிச்சு பாத்திட்டேன். அவங்க எல்லாம் அப்பிடித்தான் சொல்றாங்க.

அங்க இருக்கிற பாறைகள்ல பழைய “கிராமி” மொழியில அத எழுதி வச்சுருக்காங்க. இத ஆராய்ச்சி செய்ய வெளிநாட்டுல இருந்து கூட ஆளுக. வந்து ஏதோ ஆராய்ச்சி பண்ணிட்டு போனாங்களாம். நானும் வெளியூர் தான ஏதோ அவங்க சொன்னத கேட்டேன். அவ்வளவு தான் மத்தபடி எனக்கு எதுவும் தெரியாது. இந்த பாறை ஒரு சமணப்படுக்கைன்னு மட்டும் என்னால ஆணித்தரமா சொல்ல முடியும். அங்க இருக்கிற மகாவீர் சிலை , புத்தர் சிலை இதெல்லாம் பாக்கும் போது , சமணர்கள் இங்க தங்கியிருந்திருக்காங்கன்னு தெரியவருது,

அங்க பாய் தலையணை வேற இருக்கு என்று வாஞ்சி சொன்னதும்

என்னது பாய், தலையணையா? “ஆமாடா” அங்க போய் பாருங்க. அப்ப தான் நான் சொன்னது தெரியும் என்றார் வாஞ்சி சொல்லிக் கொண்டே திரும்பிப் பார்த்தார்.

அங்கே ஒரு சிறுவன் ஓடி வந்து கொண்டிருந்தான்.

டேய் , ஏன் இப்படி தலை தெறிக்க ஓடிவார என்று வாஞ்சி கேட்டபோது, சார் என்னோட சாமண்ட்டிரி பாக்ஸ் காணாம போயிருச்சு அதுல இருவது ரூவா வேற வச்சுருந்தேன். காணாமப் போனது எங்க அம்மாவுக்கு தெரிஞ்சுதுன்னா அவ்வளவு தான் தோல உரிச்சுப்புடும் சார் என்று அழுது கொண்டே அவன் சொன்னதை வாஞ்சி உட்பட அங்கிருந்த மாணவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

டேய் கேட்டீங்களாடா? அடுத்தவங்களோட பொருள எடுக்கக்கூடாதுடா அது தப்பு யார் எடுத்திருந்தாலும் அத கொண்டு வந்து குடுத்திருங்க. அது தான் நல்லது அடுத்தவங்களோட பொருளுக்கு நாம என்னைக்கும் ஆசைப்படக் கூடாது என்று வாஞ்சி நீதி மொழிகளை மாணவர்களிடம் விதைத்துக் கொண்டிருந்தார்.

உடனே ஒரு பையன் வாஞ்சியிடம் ஓடி வந்தான்

சார் தப்பு என்னோடது தான் முன்னாலயே நான் குடுத்திருக்கனும் இந்த பாக்ஸ் வராண்டாவுல கெடந்தது. இந்தாங்க சார் என்று பாக்ஸை க் கொடுக்க, வெரிகுட் வெரிகுட், என்று அந்தப் பையனை உச்சி முகர்ந்து வாழ்த்தினார் வாஞ்சி.

“எல்லாரும் பாக்ஸ் குடத்த தம்பிக்காக கைதட்டுங்க என்றபோது மொத்த வகுப்பறையும் அந்தச் சிறுவனுக்காகக் கை தட்டியது.

இதையே, காலையில் பிரேயரிலும் செய்தார் வாஞ்சி. பாக்ஸைக் கொடுத்துவனுக்கு என்னவோ போலானது.

பாத்தீங்களாடா இது தான் நேர்மைக்கு கிடைச்ச பரிசு நீங்களும் இதே மாதிரி செஞ்சீங்கன்னா, அந்தப் பையன் மாதிரியே உங்களுக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்று வாஞ்சி சொல்ல, மொத்தக் குழந்தைகளும் ஆரவாரம் செய்தனர். அன்றிலிருந்து ஏதாவது பேனா பென்சில், சிலேடு, பாக்ஸ் என்ற ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து சார், இது கீழ கெடந்தது என்று கொடுத்தனர்,

மாணவர்கள் அத்தனையும் வாங்கிக் கொண்ட வாஞ்சி, இந்த பென்சில் யாரோடது இந்த பேனா யாரோடது என்று கேட்க யாரும் கேட்காமல் இருந்தது – யாரும் பொருட்களைத் தொலைக்க வில்லை என்று தெரிய வந்தது.

என்னது இது யாரும் தொலைக்காமலே கொண்டு வந்து தர்றானுக என்ற வாஞ்சி யோசிக்க ஆரம்பித்தார்.

மாணவர்களின் முன்னால் இன்னொடு மாணவனைப் புகழ்வதும் அவனுக்கு பரிசு கொடுத்துப் பாராட்டுவதும் மாணவர்களின் நெஞ்சில் ஆழப்பதிந்துள்ளது.

“ஓகோ… இவனுக யாரும் தொலைக்காமலே அவனுக சொந்தப் பொருள எடுத்து குடுத்திட்டு நல்ல பேர் வாங்குறானுக என்று வாஞ்சிக்குப் புரிந்தது.

எது எப்படியோ அடுத்தவர்களின் பொருள் மீது ஆசைபடக் கூடாது அப்படிங்கிறத நாம பிஞ்சு மனசில வெதச்சிட்டோம்;

அதுமட்டுமில்ல அடுத்தவங்க முன்னாடி பாராட்டப் படனும் அப்படிங்பிறது வந்திருச்சு என்ற வாஞ்சையில் இருந்தார் வாஞ்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *