செய்திகள்

பான் கார்டுக்கு பதில் ஆதார்

பான் கார்டுக்கு பதில் ஆதார்

இனி பான் கார்டு ஆதார் கார்டு இதில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கொள்ளலாம்.

நாட்டில் 120 கோடி பேரிடம் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால் வரி செலுத்துவோர் பான் கார்டுக்கு பதிலாக இனி ஆதார் விவரங்களை தந்தால் போதும் என்று அறிவித்தார்.

அதாவது பான் கார்டு இல்லாதவர்கள் ஆதார் மட்டும் வாங்கிக்கொண்டால் வரி செலுத்தவும் இதர தேவைகளுக்கும் உபயோகித்துக்கொள்ளலாம்

பணப் பரிவர்த்தனை வரி

ஒரு கோடியை பணமாக வங்கிகளில் எடுத்தால் 2 சதவிகித வரி பிடிக்கப்படும் என்று நிர்மலா அறிவித்தார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கவே இந்த முடிவு என்றும் குறிப்பிட்டார்.

வரிச்சலுகைகள்

மின்சார வாகனங்கள் விற்பனையை அதிகரித்து மாசு தூசி இல்லா நாடாக உயர்த்த மின்சார வாகனங்கள் வாங்குவோர்க்கு விசேஷ சலுகைகள் அறிவிப்பதாக கூறினார். அதன் படி வருமான வரியில் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் சலுகை பெறலாம் என்று அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *