செய்திகள் நாடும் நடப்பும்

பாதுகாப்பு துறைக்கு பலம் தரும் பட்ஜெட்

Makkal Kural Official

ஆர். முத்துக்குமார்


இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நிதி ஒதுக்கீடு மிக அதிக அளவில் ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பெற்று இருக்கிறது.

கடந்த நிதியாண்டில் ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் நடப்பு நிதியாண்டில் ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது அனைத்து அமைச்சக ஒதுக்கீடுகளை விட மிக உயர்ந்ததாகும்.

மூலதனச் செலவாக ரூ.1.72 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு 12.9 சதவீதமாக உள்ளது. மேலும் உள்நாட்டு மூலதன கொள்முதலுக்கு ரூ.1,05,518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு துறையில் தற்சார்பு அடைவதை ஊக்குவிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் எல்லை போக்குவரத்து துறைக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க, ஸ்டார்ட்அப்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களால் வழங்கப்படும் தொழில்நுட்ப தீர்வுகளுக்கு நிதி அளிக்கும் ஐடெக்ஸ் திட்டத்திற்கு ரூ.518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும் பாதுகாப்பு துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. தற்போது நாடு ஆயுதப் படைகளின் உடனடித் தேவைகளுக்காக மட்டுமே ஆயுத இறக்குமதியை நம்பியிருக்கிறது.

இந்திய அரசு ராணுவ நவீனமயமாக்கல், போலீஸ் படை நவீனமயமாக்கல் மற்றும் எல்லை மேலாண்மை ஆகியவற்றுக்கான பரந்த அளவிலான திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவின் திறனை பாதுகாப்புத் திறனுக்காகப் பயன்படுத்துவது குறித்து ஆராய ஒரு பணிக்குழுவும் செயல்பட வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய இராணுவப் படையைக் கொண்டுள்ளது. இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு துறை உறவுகள் கொண்ட நாடுகள் – அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ்.

இந்த ஒதுக்கீடுகள் மற்றும் நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளும் தொடரப்படுகின்றன.

பொருத்தமாக இது இந்திய பாதுகாப்புத் துறையின் நவீனமயமாக்கலில் புதிய பரிமாணங்களை உருவாக்கும்.

உலகம் முழுவதும் மோதல்கள் அதிகரித்து வருவதால் எல்லை எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு தயார் நிலையில் பாதுகாப்பு துறை எப்போதும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு, சிறந்த தொழில்நுட்பம், உள்நாட்டு நவீன ஆயுதங்கள், போர் விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், சாலையில் இயங்கும் வாகனங்கள், டிரோன்கள் போன்றவற்றின் கையாளுதலுக்கான பரிமாணத்தையும் உள்வாங்கி செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

பாதுகாப்பு துறை மேம்படுத்தப்பட்ட இத்தகைய நிதி ஒதுக்கீடு மூலம், இந்தியாவின் பாதுகாப்புத் திறன் மட்டுமின்றி, உலக அரங்கில் தற்காப்புத்திறனை மேம்படுத்தும் முயற்சிகள் அதிகரிக்கும்.

இந்த நிலையில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம், நமது எல்லை பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றில் தற்சார்பு அடைந்து முன்னேறுவதே இந்த நிதி ஒதுக்கீட்டின் முக்கிய நோக்கமாகும். இது, நமது பாதுகாப்பு துறையின் எதிர்காலத்தை உறுதியாக கட்டமைக்க உதவும்.

இந்திய பாதுகாப்பு துறைக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துதல், நவீன ஆயுதங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், எதிர்காலத்தில் மிக முக்கியமான மாற்றங்களையும் சாதனைகளையும் கொண்டு வரும்.

இந்தப் பரந்த அளவிலான நிதி ஒதுக்கீடு, பாதுகாப்புத் துறையின் ஆற்றல் மற்றும் திறனை மேம்படுத்துவதோடு, இந்தியாவை உலக அரங்கில் பாதுகாப்புத் துறையில் ஒரு முன்னோடியாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *