பாட்னா, ஜூன் 17–
வெப்ப அலை தொடர்வதன் காரணமாக, பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 24 ந்தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் இன்னும் வாட்டி வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பாட்னா மாவட்டத்தில் ஏற்கெனவே வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
24 வரை பள்ளிகள் மூடல்
பாட்னாவில் ஜூன் 18 ந்தேதி வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 24 ந்தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.