வாழ்வியல்

பாடுவது உடல் நலத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது!–1

Spread the love

பாடுவது நமது உற்சாகத்தை அதிகரிக்கிறது. ஆனால் நமது உடல் ஆரோக்கியத்திலும் அது பயன் தருகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
நுரையீரல் கோளாறு உள்ளவர்களுக்கு சுவாசத்தை மேம்படுத்தவும், நினைவுத்திறன் குறைபாடு உள்ளவர்கள் அதைக் கையாளவும் இது உதவுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக உளவியல், உயிரியல் மற்றும் நடத்தை செயல்பாடுகளுக்கும் பாடும் பழக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிவதற்கு பல ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.
பாடும் போது உடலில் பல மாற்றங்கள் நடக்கின்றன என்றும், கார்ட்டிசோல் போன்ற மன அழுத்தம் தொடர்பான சுரப்பிகள் சுரப்பதைக் குறைப்பது, உள்ளிட்ட பணிகள் இதன் மூலம் நடக்கின்றன. மன நிலையுடன் தொடர்புடைய என்டார்பின் அளவுகளிலும் வித்தியாசத்தை எங்களால் காண முடிகிறது என்று லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் கூறியுள்ளார்.
நரம்பியல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, பாட்டுப் பாடுவதும் ஒரு சிகிச்சை முறையாகக் கையாளப்படுகிறது. பாட்டுப் பாடுவது ஆரோக்கியத்துக்கான பன்முக பயன்பாடு கொண்ட ஒரு செயல்பாடாக உள்ளது.
அதில் நிறைய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. பாட்டுப் பாடுவது என்பது, உணர்வுகளை வெளிப்படுத்தும் அம்சமாக இருப்பதால் மனநலத்துக்கு நல்லது என்று கூறுகிறார். இசையைக் கேட்பதும்கூட கணிசமான அளவுக்கு ஆரோக்கியத்துக்கு பயன் தருவதாக இருக்கிறது என்று பேராசிரியர் கூறுகிறார்.
” மன மற்றும் உடல் ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்களுக்கு, பாட்டுப் பாடுவது என்பது சிகிச்சையில் உதவிகரமாக இருக்கிறது என்று பிரிட்டனில் உள்ள கேன்டர்பரி கிரைஸ்ட் சர்ச் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வு முடிவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் குழுவாகப் பாடுவது என்பது, தீவிரமான மற்றும் அதிக காலமாக உள்ள மன நலப் பிரச்சினைகளை சரி செய்வதில் உதவிகரமாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *