செய்திகள்

பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

திருவள்ளூர், பிப்.25–

ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.அலெக்சாண்டர் ஏற்பாட்டில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளரும், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானமும் மற்றும் ஏழை எளிய தாய்மார்களுக்கு வேட்டி சேலை, தையல் மிஷின், அயன்பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதையொட்டி திருவல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று துணை முதலமைச்சருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பத்தாயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானத்தை துவக்கி வைத்து ஏழை எளிய தாய்மார்களுக்கு வேட்டி, சேலை, அயன் பாக்ஸ், தையல் மிஷின், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் ஆகியவற்றை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சரும், மதுரவாயல் பகுதி செயலாளருமான பா.பெஞ்சமின், தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சரும் மற்றும் செய்தி தொடர்பாளருமான மாபா.க. பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் வி.மூர்த்தி, எஸ்.அப்துல் ரஹீம், மாவட்ட அவைத்தலைவர் காசு ஜனார்தனன், மாவட்ட துணைச் செயலாளர் மாதவரம் டி.தட்சிணாமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன்,

மாவட்ட இணைச்செயலாளர் புலவர் ரோஜா, அம்பத்தூர் பகுதி செயலாளர் என்.அய்யனார், மாதவரம் பகுதி செயலாளர் டி.வேலாயுதம், திருவொற்றியூர் பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன், ஆவடி நகர செயலாளர் தீனதயாளன், திருநின்றவூர் நகரச் செயலாளர் தர்மலிங்கம், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜா என்கிற பேரழகன், புழல் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி மற்றும் அம்பத்தூர் பகுதி நிர்வாகிகள் டன்லப் வேலன், முகப்பேர் பாலன், மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.டி.மைக்கேல்ராஜ், மாவட்ட பிரதிநிதி கே.பி.முகுந்தன், தீபா சீயாளம், வட்ட செயலாளர்கள் சுந்தர பாபு, வெங்கடேசன், ரவி செல்வராஜ், மணி, லித்தோமோகன், சீவி மணி ஜோசப், ஜான், பீட்டர், ரமேஷ், எச்.மோகன், ஏ.கே.டி.தனசேகர், அரிகிருஷனன், குமார், முகப்பேர் இளஞ்செழியன், குப்பம்மாள் வேலாயுதம், வக்கீல் அறிவரசன், கேபிள் ராஜசேகர், வெள்ளை என்கிற லட்சுமணன், வடகரை மு.சுந்தர் பிரபாகரன், எல்.என். சரவணன், பி.டி.சி. பாபு, மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி. அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *